விழுப்புரம் தெற்கு மாவட்டம் சார்பில் நடந்த ரத்த தான முகாமில், ஆர்வ மிகுதியால் ஒரே டேபிளில் 2 பேர் படுத்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். விழுப்புரம் தெற்கு மாவட்டம் சார்பில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி பிறந்த நாளையொட்டி ரத்த தான முகாம், கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தினகரன் வரவேற்றார். முகாமை கவுதமசிகாமணி எம்.பி., முகாமை துவக்கி வைத்தார். அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் சட்ட மன்ற உறுப்பினர் லட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ரத்த தான முகாமில் ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட டேபிள்களில் இளைஞர்கள் பங்கேற்று ரத்த தானம் வழங்கினர். நேற்றைய முகாமில் 150க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர். ஆர்வமிகுதியால் சில கட்சியினர் ஒரே டேபிளில் 2 பேர் இருக்கமாக படுத்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். ரத்த தானம் வழங்குவது சிறப்பான காரியம். ஆனால், ஒரே படுக்கையில் 2 பேர் படுக்க வைத்து ரத்த தானம் பெறுவது கவனக்குறைவாக இருந்தது.
மேலும், முகாமை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் பொன்முடி,
தனது உரையை பேச ஆரம்பித்த போது, ஆரம்பித்த போது வருங்கால தமிழகமாக இருக்கும் தம்பியை, குடும்பத்தில் ஒருவராக தான் பார்ப்பதாகவும், அப்படி சிறப்பான உதயநிதி என்று கூறுவதற்கு பதிலாக, தயாநிதி... அன்புமணி என்று பெயரை மாற்றி கூறினார். பெயரை தவறாக குறிப்பிட்டுவிட்டோம் என சுதாரித்து கொண்ட அமைச்சர் பொன்முடி, உடனடியாக மன்னிக்கவும் உதயநிதி என மாற்றி கூறினார். உதயநிதி பெயரையே அமைச்சர் மறந்து தயாநிதி அன்புமணி என்று கூறிய சம்பவம் முகாமில் கலந்து கொண்டவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.