விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கெடார் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் மக்களை தேடி மருத்துவமும் இல்லம் தேடி கல்வியும் வாக்கு சேகரிக்க வந்துள்ளதாகவும் திமுகவிற்கு வாக்கு அளியுங்கள் என்று மட்டும் கேட்கபோவதில்லை மக்கள் பிரச்சனைகளை மனுக்களாக கேட்டு பெற வந்துள்ளதாக மக்கள் மத்தியில் தெரிவித்தார்.


பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு  


விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட கெடார், கோழிப்பட்டுகிராமத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமனன், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வாக்கு சேகரிப்பு பிரச்சார கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், கட்டணமில்லா பேருந்து சேவைக்காக முதலமைச்சாரக பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தினை முதல்வர் ஸ்டாலின் போட்டதாகவும் பெண்களுக்கான திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.


மக்களை தேடி மருத்துவமும் இல்லம் தேடி கல்வியும் வாக்கு சேகரிக்க வந்துள்ளதாகவும் திமுகவிற்கு வாக்கு அளியுங்கள் என்று மட்டும் கேட்கபோவதில்லை மக்கள் பிரச்சனைகளை மனுக்களாக கேட்டு பெற வந்துள்ளதாகவும் தெரிவித்தார். அந்த மனுக்கள் மீதான நடவடிக்கை எடுக்கப்படுமென அன்பில் மகேஷ்  கூறினார்


மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேச்சு  


வாக்குசேகரிப்பு பிரச்சார கூட்டத்தில் பேசிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினரை சார்ந்தவர்கள் வெற்றி பெற்றால் தான் ஆளும் கட்சியின் சாதனைகள் கொண்டு வரப்படும் என்றும் திமுகவை ஏற்றுக்கொண்டவர்கள் என்றும் கெடார் என தெரிவித்தார். மக்கள் நலதிட்டங்களுக்காக 3 ஆயிரம் கோடி அமெரிக்க சென்று உலக வங்கியில் கடன் கேட்பதற்காக நாளை இரவு செல்வதாக தெரிவித்தார்.