புதுச்சேரியில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நெல்லித்தோப்பு அண்ணாநகரை சேர்ந்த பழனிராஜ்   என்பவர் தனது வீட்டு முன்நிறுத்தி இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான TAVERA கார் காணவில்லை என உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இது குறித்து  விசாரணை செய்த போலீசார் காரில் இருந்த GPRS கருவியை ஆய்வு செய்ததில் கடைசியாக திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் கிராமத்தில்  பெட்ரோல் பங்க்கை காட்டியது. அங்கு பெட்ரோல் நிரப்பிய குற்றவாளி காரில் GPRS இருப்பதை கண்டறிந்து தூக்கி எறிந்துள்ளான்.


அதன் பிறகு கார் சிக்கனல் இல்லை. இதனால் பெட்ரோல் பங்க்கில் உள்ள சிசிடிவியை ஆய்வு செய்ததில் கார் திருடன் சிக்கினான். கரூர் கீழ்பஞ்சம்பட்டியை  சேர்ந்த சுரேஷ் என்கிற குளித்தலை சுரேஷ் (31) என்பது தெரிய வந்தது. அவரை கடந்த ஏப்ரல் 27ம் தேதி  வாணியம்பாடி பெருமாள்பேட்டை சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வாணியம்பாடி போலீசார் செம்மர கடத்தல் வழக்கில் இவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.


Suicide : கள்ள உறவில் தகராறு.. கட்டுமானப் பணியாளர் காதலி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை




இதனையறிந்த புதுச்சேரி உருளையன்பேட்டை போலீசார் சுரேஷை காவலில்  எடுத்து அவர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலம் புதுச்சேரி கன்னியகோயில் அவருக்கு சொந்தமான ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான  வீட்டில்  மறைத்து வைத்திருந்த  TAVERA காரை பறிமுதல் செய்தனர். காரை திருடிய இவர் கரூர், கடலூர், விழுப்புரம் என பல இடங்களுக்கு சென்று விற்க முயன்றுள்ளார்.




ஆனால் தொகை படியாத காரணத்தினால் காரை கன்னியக்கோயில்லில் உள்ள தனது வீட்டில் மறைத்து வைத்துள்ளார். இவருக்கு தமிழகத்தில் 10 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளதாகவும் இவற்றின் மதிப்பு 20 கோடியை தாண்டும் என போலீசார் தெரிவிக்கின்றனர். ஆள் கடத்தல், கார் கடத்தல், திருட்டு, செம்மர கடத்தல் என குற்றமே இவரது தொழில். தற்போது அவர்  காரை திருடிய குற்றத்திற்காக மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கபட்டார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி - கலால் துறை அறிவிப்பு


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண