விழுப்புரம் : உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மல்லர் வீரர்கள் 22 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர், இரயில் மூலம் விழுப்புரம் வந்த விளையாட்டு வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


உத்தரபிரதேச மாநிலம் உஜ்ஜைனில் கடந்த 9ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை 68வது தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 19 மாநிலங்களைச் சேர்ந்த 456 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். 14, 17, 19 ஆகிய வயதினருக்கான மல்லர் கம்பம் விளையாட்டு பிரிவில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு குழுவினர் ஒன்பது வெள்ளி பதக்கங்களையும், 13 வெண்கல பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.


தனிநபர் பிரிவில் மணிதர்சன் வெள்ளி பதக்கமும், மதிவதனி வெங்கலமும் வென்று சாதனை படைத்துள்ளனர். இன்று காலை ரயில் மூலம் விழுப்புரம் வந்தடைந்த விளையாட்டு வீரர்களுக்கு மல்லர் கம்ப விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், பெற்றோர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் என ஏராளமாணோர் திரண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாலை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.


மல்லர் கம்பம் விளையாட்டு என்றால் என்ன?


மல் என்னும் சொல் வளத்தைக் குறிக்கும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.உடல்வளம் கொண்ட சங்ககால மன்னர்களில் ஒருவன் ஆமூர் மல்லன்.  தெருக்களில் வித்தை காட்டும் டொம்பர் தம் குழந்தைகளை நட்டுவைத்த மரத்தில் தலைகீழாக ஏறவும் இறங்கவும் செய்து விளையாட்டு காட்டுவர்.



தற்காலத்தில் இந்தியாவில் பல மாநிலங்களும் பங்கு கொள்ளும் தேசிய உடல்வித்தைப் போட்டியாக நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு தொன்றுதொட்டு விளையாடப்பட்டு வந்தாலும் 18-ம் நூற்றாண்டில் மகாராட்டிர மாநிலத்துப் பலம்பத்த தாதா தியோதர் என்பவரால் புத்துயிர் ஊட்டப்பட்ட விளையாட்டே சிறப்புற்று விளங்குகிறது. நடப்பட்ட கம்பத்தில் வித்தைகாட்டும் விளையாட்டில் ஆண்கள் பங்கு கொள்வர். கயிற்றில் தொங்கி வித்தை காட்டும் விளையாட்டுகளில் பெண்கள் பங்குகொள்கின்றனர்.


ஆதி மனிதன் மரம் ஏறி இறங்க பல்வேறு வழிமுறைகளை கையாண்டான். அதை விதியாக வகுத்தான். இந்த முறையில் மனிதன் போல மரம் அல்லது கல்லில் உருவம் அமைத்து மல்யுத்தம் செய்ய பயிற்சிகள் மேற்கொண்டதால் இவ்விளையாட்டு மல்லர் கம்பம் எனப்பட்டது.


இதையும் படிங்க: WPL 2025 Auction: என்னப்பா ரெடியா..! மகளிர் பிரீமியர் லீக் ஏலம், எங்கு? எப்போது? 120 வீராங்கனைகள், யாருக்கு ஜாக்பாட்?


வழுக்கு மரம்:


தற்காலத்தில் கோவில் விழாக்களில் விளையாடும் வழுக்கு மரம் அக்கலத்தில் சோழர்கள் விளையாடிய மல்லர் கம்பததின் மறு உருவாகும்.காஞ்சியை ஆண்ட மாமல்லன் நரசிம்மப் பல்லவன் இக்கலையைஸ் செழிக்க செய்தான். தமிழ நாட்டு வீர தற்காப்பு கலைகளுல் இதுவும் ஒன்று. இவ்விலையாட்டு மனதை ஒருனிலைப் படுத்தும் ஓர் கலையாகும்.


இவ்விளையாட்டு வடமாநிலங்களில் மால்காம் என்ற பெயரில் விளையாடப்படுகிறது. தற்காலத்தில் மல்லர் விளையாட்டு நிலைக் கம்பம், தொங்குகம்பம் கயிறு விளையட்டு என பிரித்து விளையாடப்படுகிறது. நிலைக் கம்பம் என்பது பருமனான மரத்தை நட்டு அதில் ஏறி பலவித ஆசனங்கள் செய்வது. தொங்கு கம்பம் என்பது பருமனான மரத்தை கயிற்றில் கட்டி எண்ணெய் பூசி வீரதீர விளையாட்டு ஆடுவது. கயிறு விளையாட்டு என்பது கம்பத்திற்கு பதில் கயிற்றில் பெண்கள் ஏறி ஆசனம் செய்வது. இது இந்தியாவில் பல மநிலங்களில் இன்றும் விளையாடப்படுகிறது.