அனுமதியின்றி புதுச்சேரிக்கு வந்த சொகுசு கப்பல்: திருப்பி அனுப்பிய கடலோர காவல்படை

புதுச்சேரி துறைமுகம் மற்றும் சுற்றுலா இரண்டிலுமே அனுமதி பெறவில்லை - புதுச்சேரி கடலோர காவல்துறை

Continues below advertisement

புதுச்சேரி: கேசினோ சூதாட்ட புகாரால் எழுந்த எதிர்ப்பால் புதுச்சேரி வந்த சென்னை சுற்றுலா சொகுசு கப்பலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சொகுசு கப்பல், கடலிலேயே நின்று விட்டு சென்னைக்கு மீண்டும் புறப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடல் வழி மார்க்கமாக சென்னை - விசாகப்பட்டினம் - புதுச்சேரி இடையே இயங்கும் தனியார் சொகுசு கப்பல் சுற்றுலாவைத் தொடங்கி வைத்திருந்தார்.

Continues below advertisement

சென்னையிலிருந்து கிளம்பும் கப்பல் புதுச்சேரி உப்பளம் துறைமுகத்துக்கு வந்து, புதுச்சேரியில் பயணிகளை ஏற்றி, இறக்கவும் திட்டமிட்டிருந்தனர். புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு மீண்டும் இக்கப்பல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு புதுச்சேரியின் ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியான அதிமுக உட்பட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தக் கப்பலில் கேசினோ சூதாட்டங்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன் இந்தக் கப்பல் புதுச்சேரி கடலில் நிற்க புதுச்சேரி அரசு அனுமதி தந்துள்ளதா? அப்படி அனுமதி தந்திருந்தால் அந்தக் கப்பல் நிற்க கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா என்று கேள்விகள் எழுப்பப்பட்டன.


இதுபற்றி ஆளுநர் தமிழிசை கூறியதாவது:- கப்பல் நிற்பது தொடர்பாக கோப்பு ஏதும் என்னிடம் வரவில்லை. அப்படியே கப்பல் வந்தாலும் கலாசார சீர்கேடு தொடர்பான எந்த நடவடிக்கையை புதுச்சேரி அரசு அனுமதிக்காது என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், சென்னையிலிருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் சென்று விட்டு புதுச்சேரிக்கு இக்கப்பல் வந்தது. இன்று புதுச்சேரி கடற்கரையில் இருந்து பார்த்தபோது தனியார் சொகுசு கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது தெரிந்தது. இதனால் உப்பளம் துறைமுகத்துக்கு கப்பல் வந்து பயணிகள் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், புதுச்சேரி கடலில் இருந்து அக்கப்பல் புறப்பட்டு சென்றது. இதுபற்றி அரசின் உயர் மட்டத்தில் விசாரித்தபோது, சொகுசு கப்பல் புதுச்சேரிக்கு வந்து கடலில் நிறுத்தி விட்டு பயணிகள் உப்பளம் துறைமுகத்தின் வழியே இறங்கி செல்வதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது. அதற்கு இதுவரை அனுமதி தரப்படவில்லை. அரசின் பரிசீலனையில் இதுதொடர்பான கோப்பு உள்ளது. இதனால் பயணிகளை ஏற்றி வந்த சொகுசு கப்பல் கடலில் நின்று விட்டு புறப்பட்டுவிட்டது என்று தெரிவித்தனர்.

புதுச்சேரிக்கு சொகுசு கப்பல் தொடர்பாக புதுச்சேரி கடலோர காவல்துறை கூறுகையில், "கடலோர காவல்துறை தரப்பில் விசாரணை செய்ததில் துறைமுகம் மற்றும் சுற்றுலா இரண்டிலுமே இந்த சொகுசு புதுச்சேரி வருவதற்கு அனுமதி பெறவில்லை. அவை உள்ள வருவதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. புதுச்சேரி ஆளுநர் அலுவலகத்திலும் இந்த சொகுசு கப்பல் புதுச்சேரி வருவது தொடர்பாக இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. இதனால் புதுச்சேரி கடலோர எல்லையில் இருந்து 5 நாட்டிக்கல் தூரத்தில் நங்கூரமிட்டு இந்திய கடலோர எல்லையில் இவர்கள் இந்த கப்பலை நிறுத்தி வைத்துக்கொள்ளலாம். ஆனால் புதுச்சேரி எல்லைக்குள் வர முடியாது. அனுமதியின்றி இந்திய எல்லையை கடந்து புதுச்சேரி கடலோர எல்லைக்குள் வந்தால் மட்டுமே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அனுமதி பெறும் வரை இந்திய கடல் எல்லையில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நிற்கலாம் என்பதால் அங்கே நின்றுக் கொண்டிருக்கிறது. தற்சமயம் கப்பல் அனுமதி இல்லாத காரணத்தினால் திருப்பி சென்றுள்ளது," என்று தெரிவித்துள்ளனர்.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி - கலால் துறை அறிவிப்பு

Naturals CEO : நேச்சுரல்ஸ் சலூன் பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் பிசினஸ் - சி.கே.குமரவேல்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

Continues below advertisement
Sponsored Links by Taboola