கடலூர் மாவட்டம் சிதம்பரம் பி.முட்லூர் பகுதியில் பி.முட்லூர் பரங்கிப்பேட்டை சாலையில் ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர்.

 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் வீடுகள் அலுவலங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு, மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் சந்தேகத்திற்கு உரிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

இந்த நிலையில் சிதம்பரம் அருகே உள்ள பி.முட்லூர் பரங்கிப்பேட்டை சாலையில் உள்ள சீனு என்கிற ராமதாஸ் என்பவர் ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலராக இருந்து வருகிறார். இவரது வீட்டில் நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் அவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நான்கு சக்கர வாகனம் ஜீப் மற்றும் அருகில் உள்ள மரத்தின் மீது இரண்டு மண்ணெண்ணெய் பாட்டில் வீசி சென்றுள்ளனர். இதில் ஜீப் முன்பக்கம் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது ஆனால் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. 

 



 

இது தொடர்பாக பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்துள்ளனர். மேலும் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மண்ணெண்ணெய் பாட்டில் மூலம் இரண்டு முறை முயற்சித்துள்ளனர் அதில் வாகனத்தில் மீதும், மற்றொன்று வீட்டின் அருகே இருந்த மரத்தின் மீதும் பட்டுள்ளது. அதில் ஒரு குண்டு வெடித்து வாகனத்தின் முகப்பு கண்ணாடி முன்பு எரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது அரிய அப்பகுதியில் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஆய்வு செய்து வருவதாகவும் சிதம்பரம் காவல் துணைக் கண்காணிப்பாளர்(பொறுப்பு) 

என்றார். மேலும் அவர்களுக்குள் கோயில் விவகாரம் தொடர்பாக கடந்த 15 ஆண்டுகளாக முன் விரோதம் இருப்பதால் அந்த கோணத்திலும் விசாரணை செய்து வருகிறோம் என்றும் ஆரோக்கியராஜ் தெரிவித்துள்ளார்.