புதுச்சேரி அருகே ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட தமிழகப் பகுதி விழுப்புரம் மாவட்டத்தை சோ்ந்த திமுக ஒன்றியக் குழு உறுப்பினரை புதுச்சேரி போலீஸாா் கைது செய்தனா்.  புதுச்சேரி அருகே திருக்கனூா் பகுதி சங்கராபரணி ஆற்றில் மணல் திருட்டு தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இதேபோல, திருக்கனூா் அருகே சோரப்பட்டு - குயிலாப்பாளையம் சாலையோரம் ஆற்று மணல் கடத்திவரப்பட்டு, சிலரால் குவித்து வைத்து விற்கப்படுவதாக திருக்கனூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருக்கனூா் காவல் நிலைய ஆய்வாளா் ஆறுமுகம், உதவி ஆய்வாளா் வெங்கடேசன் மற்றும் போலீஸாா் அந்தப் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை காலை விரைந்து சென்று சோதனை நடத்தினா். அப்போது அங்கு, சிறிய சரக்கு வாகனம் மூலம் ஆற்று மணல் கடத்திவரப்பட்டு குவிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.


போலீஸாா் அந்தப் பகுதியில் விசாரணை நடத்தியதில், திருக்கனூரை அடுத்துள்ள தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், பெரியபாபுசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த திமுக ஒன்றியக் குழு உறுப்பினரான சரவணன் (42), அவரது சரக்கு வாகனம் மூலம் அருகே உள்ள தமிழகப் பகுதியிலிருந்து ஆற்று மணலைக் கடத்தி வந்து புதுவையில் விற்பதற்காக அந்த இடத்தில் குவித்து வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அங்கு குவித்து வைத்திருந்த 4 யூனிட் மணலை பறிமுதல் செய்த திருக்கனூா் போலீஸாா், ஆற்று மணல் கடத்தலில் ஈடுபட்ட பெரியபாபுசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த ஒன்றியக் குழு உறுப்பினா் சரவணனை  கைது செய்தனா். தொடா்ந்து, அவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.




“பொறுப்பு; ஆட்சி; பென்ஷன் பணம் - பறிபோனால் நாங்கள் பொறுப்பல்ல” - வெளிப்படையாக மிரட்டும் அண்ணாமலை


பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயதும் இனி 60.. அமலுக்கு கொண்டுவந்த தமிழ்நாடு அரசு..!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர