விழுப்புரம்: கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படவுள்ள நிலையில் விழுப்புரம் அருகே நாரசிங்கபுரத்தில் பாரம்பரிய முறையில் மாவொளி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.




நாடு முழுவதும் நாளை கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படவுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாக அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவது மரபு. மேலும் கார்த்திகை பண்டிகையின் முக்கிய நிகழ்வாக மாவொளி சுற்றுவது பொது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மாவொளி சுற்றுவதன் மூலம் தங்களின் துன்பங்கள் நீங்கி நன்மை பிறக்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அடுத்த நாரசிங்கபுரம் கிராமத்தில் பனையேறி பாண்டியன் என்பவர் பாரம்பரிய முறையில் மாவொளி தயார் செய்து வருகிறார்.




ஆண் பனை மரத்தின் பூவை பறித்து அதனை காய வைத்து எரித்து அதிலிருந்து வரும் கறியை சூடாக்கி பின்னர் அதனை துணியில் வைத்துக் கட்டப்படுகிறது. பிறகு பனை மட்டை குச்சியை கொண்டு இந்த மாவொளி பாரம்பரிய முறையில் தயார் செய்து வருகிறார். இவர் தயார் செய்யும் மாவொளி விழுப்புரம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் கார்த்திகை தீபத்திற்கும் பட்டாசு வெடிக்கும் கலாச்சாரம் அதிகரித்து ஒரு நிலையில் தொடர்ந்து பாரம்பரிய முறையில் கார்த்திகை தயார் செய்து விற்பனைக்காக அனுப்பி வருகிறார்.




கார்த்திகை தீப திருவிழா பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை


கார்த்திகை மாதத்தில் வரும் முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை வரும் நவம்பர் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் கடைவீதிகளில் அகல் விளக்குகள் உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை  திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழா பிரசித்தி பெற்றது. 


பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கருதப்படும் திருவண்ணாமலையில் கடந்த நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சிகர நிகழ்ச்சியான பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்வு நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. நேற்று (நவம்பர் 23)  தேரோட்டம் நடைபெற்ற நிலையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


அனுமதிச்சீட்டு


கார்த்திகை தீப திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக  நாளை மறுநாள் (நவம்பர் 26) அதிகாலை அதிகாலை 4 மணிக்கு கோயில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்படும். இந்த நிகழ்வில்  ரூ.500 கட்டணத்தில் 500 பேருக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட உள்ளது. இதேபோல் மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள  2,668 உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக ரூ.600 கட்டணத்தில் 100 பேருக்கும், ரூ.500 கட்டணத்தில் 1000 பேருக்கும் அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது. இந்த 2 நிகழ்ச்சிகளுக்குமான டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு விற்பனை செய்யப்படுகிறது.