கள்ளக்குறிச்சி: நண்பர்கள் அளித்த திருமண பரிசு... தேம்பி அழுத மாப்பிள்ளை

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற திருமணத்தில் நண்பர்கள் கொடுத்த பரிசால் தேம்பி அழுத மாப்பிள்ளை

Continues below advertisement

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தந்தையின் புகைப்படத்தை நண்பர்கள் பரிசு அளித்ததால், உணர்ச்சி வசப்பட்ட மாப்பிள்ளை, தேம்பி அழுத சம்பவம், அங்கிருந்த அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த கீரி பாண்டு - கௌரி தம்பதியரின் மகன் அறிவழகன். தந்தை இழந்த அறிவழகனுக்கும், மதி என்ற பெண்ணுக்கும் கடந்த 13-ம் கோயிலில் திருமணம் செய்த பின்னர், திருமண வரவேற்பு நிகழ்ச்சி, கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

Continues below advertisement

 

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருவீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு தரப்பினரும் வருகை தந்தனர். மணமக்களுக்கு பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொடுத்து உறவினர்களும், மற்றவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில், உயிரிழந்த தந்தை மீது அதீத பாசம் வைத்துள்ள அறிவழகனுக்கு, வித்தியாசமான முறையில் பரிசு அளிக்க அவரது நண்பர்கள் விரும்பி அறிவழகனின் தந்தையின் உருவப் படத்தை பேனரில் பிரின்ட் செய்து, அதனை சிறிய கட்அவுட்டாக வடிவடிமைத்து மாப்பிள்ளைக்கு பரிசாக வழங்கினர்.

சிறிய கட்அவுட் வடிவில் வடிவமைக்கப்பட்ட தந்தையின் உருவப் படத்தைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்ட மாப்பிள்ளை அறிவழகன், திடீரென தேம்பி தேம்பி அழுதார். இதனை சற்றும் எதிர்பாராத பரிசு அளித்த நண்பர்கள், அவரை சமாதானம் செய்தனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தந்தையின் உருவ படத்தைப் பார்த்து மாப்பிள்ளை அழுத சம்பவம், மணப்பெண் உட்பட உறவினர்களும் கண் கலங்க செய்தது. அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது.


இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் கட்டாயம்: உயர் கல்வித்துறை உத்தரவு

shashi tharoor : காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆகிறாரா சசிதரூர்? உள்கட்சித் தேர்தல் பரபரப்பு


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

Continues below advertisement
Sponsored Links by Taboola