விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த 1200 பக்க குற்றப்பத்திரிகையை அவரது தாய் செல்வி நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்டார்.


கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கினை சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி மரண வழக்கில் கிரைம் நம்பர் 174 லிருந்து 305 வாக மாற்றம் செய்த  சிபிசிஐடி போலீசார் கடந்த  மே மாதம் 15 ஆம் தேதி  விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இவ்வழக்கில் மாணவி இறப்பு குறித்த 1200 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர்.


இந்நிலையில் வண்டிமேட்டிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்திலும், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலும் குற்றப்பத்திரிக்கை நகல் கேட்டு மாணையின் தாயார் செல்வி விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்திருந்த நிலையில், 1200 பக்க குற்றப்பத்திரிக்கையின் நகலை இன்று மாணவியின்  தாயார் செல்வியிடம் வழங்கப்பட்டது.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண