விழுப்புரம்: ஜாதி இப்போதும் உள்ளது இனிமேலும் இருக்கத்தான் போகிறது ஜாதியின் பெயரை வைத்து வீதியில் உள்ள பெயர்களை அழிப்பது கண்டனத்துக்குரியது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று முதல் முறையாக விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை புரிந்த அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்திற்கு அருகில் உள்ள அம்பேத்கர்-பெரியார்-காரல் மார்க்ஸ் ஆகியோரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்,


இதையடுத்து பாமக பயிலரங்கதிற்க்கு வெளியிலுள்ள கொடிக்கம்பத்தில் பாமக கொடியை ஏற்றி வைத்து அதன்பிறகு தைலாபுரம் தோட்டத்தில் புனரமைக்கப்பட்ட அரசியல் பெயர் அங்கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இதனையடுத்து பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட எடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமகவின் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார், அதன்பிறகு பயிலரங்கத்தில் பாமக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


இதனையடுத்து செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-


தமிழகத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் பிரச்சனை இளைஞர்களின்  போதைப்பழக்கம், கலாச்சார சீரழிவுகள், மற்றும் ஆன்லைன் கேம்பிலிங் இது அடுத்த தலைமுறையைச் சார்ந்த பிரச்சனைகள், இதில்  தமிழக அரசு தனி கவனம் செலுத்தி உடனடியாக போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி கொண்டுள்ள இளைஞர்களை காப்பாற்ற வேண்டும், அதற்கு அடித்தளமாக இருக்கின்ற போதைப் பொருட்களை விற்பனை செய்கின்றவர்கள் மீதி குண்டர் சட்டம் போன்ற கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு கட்டுபடுத்த வேண்டும்,




மதுவிலக்கை அமல்


காவல்துறை நினைத்தால் இதை உடனடியாக தடுத்து நிறுத்தலாம், ஆனால் அவர்களால் செய்ய முடியாத ஒரு சூழ்நிலை நிலவி வருகிறது, மாணவ மாணவிகள் இடத்தில் இந்த போதை பழக்கமானது அதிகமாகி வருகிறது, திமுக அரசு வெற்றி பெறுவதற்கு முன்பாக கொள்கை ரீதியாக பூரண மதுவிலக்கை அமல் செய்வதாக கூறினார்கள், ஆனால் தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக இதுவரை அதை செய்யவில்லை, அரசு மீதமுள்ள நான்காண்டுகளில் மதுவை ஒழிக்க வேண்டிய செயல் திட்டத்தை முன்வைக்க வேண்டும், இந்தியாவிலேயே அதிக அதிகம் மது அருந்துகின்ற மாநிலமாக தமிழகம் விளங்குகிறது, தமிழகத்தில் நடைபெறுகின்ற அனைத்து சமூக விரோத செயல்களுக்கும் அடித்தளமாக மது விளங்குகிறது, சாலை விபத்துகளுக்கும் அடித்தளமாக அமைந்து உள்ளது, ஒரே அடியாக மதுவை ஒழிக்க முடியவில்லை என்றாலும் அதை படிப்படியாக குறைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும்,


ஆன்லைன் கேம்பிலிங்


இதற்கு அடுத்தபடியாக, ஆன்லைன் கேம்பிலிங் இதனால் தினமும் இரண்டு அல்லது மூன்று இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், இதற்காக விழிப்புணர்வு வீடியோ தமிழக காவல்துறை சார்பில் வெளியிடப்படுகிறது, இதைத்தான் பாமக 3 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது, இதை தடுப்பதற்கான சட்டத்திருத்தத்தை சாதாரணமாக கொண்டு வர முடியும் ஆனால் இதற்கு ஏன் அரசு தயங்குகிறது என தெரியவில்லை, சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் கேம்பிலிங்கால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 10 பேருக்கு மேல் கொலை செய்யப்பட்டுள்ளார்கள், மிக மோசமான ஒரு சமூகப் பிரச்சினையாக கேம்பிலிங் மாறியுள்ளது எனவே அரசு உடனடியாக சட்டத் திருத்தத்தை கொண்டு வந்து இதற்கு முழு தடை விதிக்க வேண்டும்.




டெல்டா:


டெல்டா மாவட்டத்தில் பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது ஆனால் டெல்டா மாவட்டங்களில் இதுவரை தூர்வாரும் பணிகள் நிறைவடையவில்லை அதில் தமிழக அரசு தனி கவனம் செலுத்தி விரைவில் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்,


ஜாதி பெயர்கள்


சென்னையில் உள்ள முக்கிய வீதிகளின் பெயர்கள் ஜாதியின் பெயரில் குறிப்பிட்டுள்ளதை தற்போது தமிழக அரசு நீக்கி வருகிறது இது கண்டிக்கத்தக்கது அப்படிப் பார்த்தால் பட்டேல் எனும் பெயர் கூட ஜாதி பெயர் தான் சுதந்திர போராட்ட வீரர்களின் பல பெயர்களுக்குப் பின்னால் ஜாதி வருகிறது அதனால் எதன் அடிப்படையில் இதில் வித்தியாசங்களை காண்கிறீர்கள், ஜாதியை கொண்டு அடக்குமுறை செய்தால் தான் தவறு, இப்போதும் ஜாதி இருக்கிறது இனி வரும் காலங்களிலும் ஜாதி இருக்கப் போகிறது இதனால் அனைத்து விஷயங்களிலும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது


பாமகவின் நோக்கம் 2026-இல் பாமக ஆட்சி அமைக்க வேண்டும் அதற்கான வியுகங்கையும், யுக்திகளையும் கையாண்டு தேர்தலில் வெற்றி பெறுவோம் எனவும் தெரிவித்தார்,


பிரதமர் மோடி ஆட்சி


பிரதமர் மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இந்தியா முழுவதும் ஊழல் பெரிய அளவில் குறைந்து இருக்கிறது இதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் நிர்வாக சீர்திருத்தங்களும் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன அதே நேரத்தில் அவர் அவரை சார்ந்துள்ள தலைவர்கள் ஒரே ஒரு மொழியை மையமாக கொண்டு மொழியைத் திணிக்கும் செயல் பாட்டில் ஈடுபடக்கூடாது ஹிந்திக்கு இணையானது தமிழ்மொழி அதனால் எந்த மொழியையும் யார் வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம் ஆனால் இந்த மொழியை தான் பயன்படுத்த வேண்டும் என யாரும் திணிக்கக்கூடாது, மாநில சுயாட்சி, மாநில உரிமைகள் இருக்கு அதை கடைபிடிக்க வேண்டும்,


பாமகவின் நீண்ட நாள் கோரிக்கையான கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வர வேண்டும், அவசர நிலைக்கு முன்பு கல்வியானது மாநில பட்டியலில் இருந்தது அதற்கு பின்பு அது பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது அதை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட்டால் நீட் போன்ற பிரச்சினைகள் இருந்திருக்காது, பல்வேறு உயிர்கள் பலி போயிருக்காது எனவே தமிழ் நாட்டுக்கு நீட்டில் இருந்து விலக்கு மத்திய அரசு கண்டிப்பாக வழங்க வேண்டும்.



சட்டம் ஒழுங்கு


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது தினமும் ஒன்று அல்லது இரண்டு கொலைகள் மற்றும் தொடர் கொலைகள் நடைபெற்று வருகின்றன, முதல்வரின் கீழ் உள்ள துறையில் அவ்வாறு நடைபெறுவதற்கான காரணங்களை ஆராய்ந்து அதன் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.