விழுப்புரம்: அனைத்து மாநில மொழிகளும் சிறப்படைய வேண்டும் என்பது தான் தமிழக முதலமைச்சரின் எண்ணம்  எந்த மொழிக்கும் விரோதிகள் அல்ல எந்த மொழிகளும் திணிக்க கூடாது சமமாக கருதவேண்டும் என்ற அடிப்படையில் தான் அதனை கண்டித்து இருப்பதாகவும் அண்ணாமலையும் திருந்தி கொள்ள வேண்டும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள முண்டியம்பாக்கம் விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனையில் 50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கழிவறையுடன் கூடிய காத்திருப்போர் அறையை அமைச்சர் பொன்முடி எம் எல் ஏ புகழேந்தி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பேட்டியளித்த  அமைச்சர் பொன்முடி முன்பு இருந்த முதலமைச்சர்கள் தலைமை செயலகத்தில் இருந்து கொண்டு பணி செய்தார்கள் ஆனால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மட்டும் தான் கள ஆய்வு என்று பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு செய்து பணி செய்வதாகவும்  தமிழ்வாழ்த்தினை பொறுத்தவரை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆடியோவாக ஒலிப்பரப்ப கூடாது எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும் வாய்மொழி வழியாக பாட வேண்டும் என உத்தரவிட்டு நடைமுறைபடுத்தினார்.


தமிழ்தாய் வாழ்த்துக்கு வாய்மொழியாக பாட வேண்டுமென அவ்வளவு முக்கியம்  முதலமைச்சர் அளிக்கையில்  தமிழகத்திற்கு வந்தா நான் வேற மாதிரி என அண்ணாமாலை பேசிக்கொண்டிருப்பதாகவும் கர்நாடகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழர்கள் இருப்பதால் தமிழ் தாய் வாழ்த்து ஒலிக்கபட்டது அப்போது முன்னாள் அமைச்சர் ஈஸ்வரய்யா தமிழ்தாய் வாழ்த்தினை நிறுத்த கூறியது ஏற்கதக்கது அல்ல கண்டனத்துக்குரியது என கூறினார். அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் தமிழ்தாய் வாழ்த்து அவமதிப்பு போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க வேண்டுமெனவும் தமிழ், தமிழுக்காக என்று கூறிக்கொண்டு இருக்கும் பாஜக அண்ணாமலைக்கு தமிழ் மீது எந்த அளவிற்கு அக்கரை இருப்பதை இது மூலமாக காட்டுவதாக தெர்வித்தார்.


தமிழ் மட்டுமல்ல அனைத்து மாநில மொழிகளும் சிறப்படைய வேண்டும் என்பது தான் தமிழக முதலமைச்சரின் எண்ணம் நாம் எந்த மொழிக்கும் விரோதிகள் அல்ல எந்த மொழிகளும் திணிக்க கூடாது சமமாக கருதவேண்டும் என்ற அடிப்படையில் தான் அதனை கண்டித்து இருப்பதாகவும் அண்ணாமலையும் திருந்தி கொள்ள வேண்டும் தமிழ்தாய் வாழ்த்து பாடும் போது மைக்கில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறுவது மக்களுக்கு எல்லாம் தெரியும் தொலைக்காட்சிகளில் பார்த்து கொண்டிருபதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.