கொத்தடிமைகளாக உள்ள 7 பேரை மீட்க கோரி கடலூரில் இருளர் சமூகத்தினர் போராட்டம்
’’பால் பண்ணையில் உள்ள முதாலாளிகள் தங்களது பேர குழந்தைகளை படிக்க விடாமல் ஆடு, மாடு மேய்க்கவும் இதர வேலைகளை செய்யவும் பயன்படுத்தி வருவதாக வேதனை’’
Continues below advertisement

தர்ணா போராட்டத்தில் இருளர் சமூகத்தினர்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் கண்ணன் இவரது மனைவி கன்னியம்மாள், கடந்த 13ஆம் தேதி கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிவா என்பவரது பால் பால் பண்ணையில் கன்னியம்மாள் மற்றும் தன் குடும்பத்தினர் 12 பேரையும் கடந்த 2 வருடங்களாக கொத்தடிமைகளாக நடத்தி வருகின்றனர், இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி கன்னியம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் 6 பேரும் தப்பித்தனர் மீதம் அங்கே உள்ள ஏழு பேரை மீட்டுத்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தார்.

இன்னிலையில் கன்னியம்மாள் குடும்பத்தினர் மற்றும் இருளர் சமுதாய மக்கள் நூற்றுக்கணக்கானோர் பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். திங்கட்கிழமை அளிக்கப்பட்ட மனு மீது இதுவரையிலும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், எங்கள் குடும்பத்தினரை அடித்து துன்புறுத்துகிறார்கள் அவர்களை மீட்டு தரும் வரை எங்கேயும் போக மாட்டோம் எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் கூட்டமொன்றில் இருக்கிறார், துறைரீதியான அதிகாரியை பார்க்க காவல்துறையினர் அறிவுறுத்திய நிலையில் மாவட்ட ஆட்சியர் பார்க்காமல் செல்லமாட்டோம் என காவல்துறையினரிடம் இருளர் சமுதாய மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இவர்கள் கூச்சலிட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கூட்டம் நடைபெற்ற கூட்ட அரங்கில் கொத்தடிமைகளாக இருந்து தப்பித்து வந்த கன்னியம்மாள் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த ஆட்சியரிடம் இருளர் சமுதாய குடும்பத்தினர் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனுவிற்கு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் இருந்து இருளர் சமுதாய மக்கள் கலைந்து சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கன்னியம்மாள் பால் பண்ணையில் தங்களை மிகவும் மோசமாக நடத்துகின்றனர், மேலும் தகாத வார்த்தைகளால் தங்களை இழிவாக பேசுகின்றனர், மேலும் தங்கள் படிக்கவில்லை என்றாலும் தங்கள் பிள்ளைகள் மற்றும் பேர குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என ஆசைபட்டோம் ஆனால் பால் பண்ணையில் உள்ள முதாலாளிகள் தங்களது பேர குழந்தைகளை படிக்க விடாமல் ஆடு, மாடு மேய்க்கவும் இதர வேலைகளை செய்யவும் பயன்படுத்தி வருகின்றனர் அவர்களை எப்படியாவது மீட்டு தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.