விழுப்புரம்: மதுவிலக்கு இருந்தால் அனைவரும் சன்னியாசியாக தான் இருப்பார்கள், மதுவை முழுமையாக ஒழிக்க முடியாது, மக்கள் மாறினால் தான் இதனை ஒழிக்க முடியும் என்றும் என்.ஐ.ஏ சோதனை மூலம் அதிகமாக இஸ்ஸாமியர்கள் தான் அதிகம் சிறையில் இருப்பதாகவும் இந்தியன் யூனியன் முஸ்ஸீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார்.


விழுப்புரத்தில் உள்ள தனியார் விடுதியில் இந்தியன் யூனியன் முஸ்ஸீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்திய நாட்டின் மூன்றாவது பிரதமராக மோடி பதவியேற்றுள்ளது, இது மக்களின் எண்ணம் இல்லை என்றும் இது அரசியலில் தவிர்க்க முடியாத நிகழ்வு என கூறினார்.


தமிழகத்தில் 40க்கு 40 வாங்கியது எல்லா மாநிலத்திற்கும் முன் மாதிரியாக கருதப்படுவதாகவும் தமிழக முதல்வர் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றினைத்து செயல்படுவது சட்டமன்ற தேர்தலிலும் இருக்கும் எனவும் மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ள தேர்தலில் இரண்டு இடங்களிலும் ஜார்க்கண்டில் இரண்டு இடங்களில் இந்தியன் யூனியன் முஸ்ஸீல் லீக் கட்சி போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் இதற்காக இந்தியா கூட்டணியின் தலைவர்களிடம் ஆதரவு கோரியிருப்பதாக கூறினார்.


மேலும், “தமிழ்நாட்டினை பொறுத்தவரை அன்னியூர் சிவா பெருமளவில் வெற்றி பெறுவார் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 1985 க்கு பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கவில்லை என்பதால் சமூக ரீதியான எண்ணிக்கை தரவுகள் இல்லை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் போதுமானது, அதற்காகதான் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ளது.


இதனை அரசியலாக்க வேண்டியதில்லை இப்போது போராட வேண்டிய அவசியமில்லை. மதுவிலக்கு எந்த மாநிலத்திலும் இல்லை அப்படி இருக்கும் மாநிலத்திலும் முழுமையாக இல்லை மதுவிலக்கு இருந்தால் அனைவரும் சன்னியாசியாகதான் இருப்பார்கள் மது அருந்துவது என்பது தனிப்பட்ட நபரின் விருப்பம், இஸ்ஸாமியத்தில் மது அருந்துவே கூடாது, மதுவை முழுமையாக ஒழிக்க முடியாது மக்கள் மாறினால் இதனை ஒழிக்க முடியும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்து உதவி செய்து வருகிறது. மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து  நிறைவேற்றியுள்ளது.


இந்தியா முழுவதும் விசாரணை கைதிகள் சிறையில் நிறைய பேர் உள்ளனர். அதில் முஸ்ஸீம்கள் தான் அதிகம்  இருக்கிறார்கள். ஏற்கனவே விசாரித்த நபர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியவில்லை நீதித்துறைக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு” என்றார். மேலும் மேலும் விசாரனை கைதிகள்தான் அதிகம் என்ஐஏ சோதனை மூலம் அதிகரிப்பதாக குற்றஞ்சாட்டினார்.