Anbumani: 37 டோல்கேட்களை எடுக்க வேண்டும்.. சுங்கக்கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ளவே முடியாது - அன்புமணி ராமதாஸ்

சுங்க சாவடி கட்டண உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், 37 சுங்கச்சாவடிகளை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Continues below advertisement

விழுப்புரம்: சுங்க சாவடி கட்டண உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது, 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மற்றவைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததுபடி பார்த்தால் 37 சுங்க சாவடிகளை எடுத்து இருக்க வேண்டும் இதுவரை எடுக்கப்படவில்லை தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் நீதிமன்றத்திற்கு சென்று உடனடியாக 37 சுங்கச்சாவடிகளை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Continues below advertisement

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் அன்னைத் தமிழின் அழகிய சொற்கள் அடங்கிய தமிழ் பெயர் பதாகைகள், குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதற்கான தமிழ் பெயர்கள் கொண்ட பதாகைகள் திறப்பு விழா நடைபெற்றது நிகழ்ச்சியில் பா.ம.க. மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கௌரவ தலைவர் ஜி.கே. மணி ஆகியோரும் கலந்துகொண்டு பதாகைகளை திறந்து வைத்தனர், நிகழ்ச்சியில் நிர்வாகிகள்உட்பட பலர் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து பாமக மாவட்ட செயலாளர்கள் மாவட்ட தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டமும் நடைபெற்றது, அதில் தமிழ் பெயர் பலகைகளை அமைக்க கூறும் துண்டறிக்கைகளை அந்தந்தபகுதிகளில் வழங்குவது குறித்த ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டது.

பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியின் போது தெரிவித்ததாவது, "லிக்னைட் எடுப்பதற்காக மத்திய அரசு கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதியிலும் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியிலும் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த வடசேரி பகுதியிலும் நிலக்கரி எடுப்பதற்கு தமிழக அரசுக்கு தெரிவிக்காமல் டெண்டர் விடப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளில் 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ஏக்கர் வரை நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து தமிழக தொழில் துறை அமைச்சர் வேளாண்துறை அமைச்சர் ஆகியோருக்கு தெரியவில்லை, நெய்வேலி நிலக்கரி எடுத்ததால் அந்தப் பகுதியில் நீர்நிலைகள், மாசு வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும், கடலூர் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுக்கும் வேளாண்மைக்கு ஆதரவாக இல்லாமல் என்எல்சி நிர்வாகத்துக்கு துணையாக நிற்கிறார் மேலும் விவசாயிகள் கூட்டத்தில் என்எல்சி குறித்து பேசக்கூடாது என தெரிவித்துள்ளார்.

சுங்கச்சாவடி கட்டண உயர்வு:

சுங்க சாவடி கட்டண உயர்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி மற்றவைகள் எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததுபடி பார்த்தால் 37 சுங்கச்சாவடிகளை எடுத்து இருக்க வேண்டும். ஆனால், இதுவரை எடுக்கப்படவில்லை. தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் நீதிமன்றத்திற்கு சென்று உடனடியாக 37 சுங்கச்சாவடிகளை எடுக்க வேண்டும் எனவும், தமிழக அரசு வருங்காலத்தில் 15000 மெகாவாட் உற்பத்தியில் செய்யப் போவதாக அறிவித்துள்ளது, இந்த ஆண்டு வெப்பமான ஆண்டு அதுக்கு ஏற்ற முறையில் மக்களுக்கு உதவுவகையில் திட்டங்களை தீட்ட வேண்டும், கோவிட்பரவலை குறித்து பயப்படத் தேவையில்லை கடந்த 10 மாதங்களில் 98 சதவீதம் ஒமிக்கிறான்தொற்று பரவி போய்விட்டது, ஆசிரியர்கள், பேராசிரியர்கள் காலியிடங்களை நிரப்புவதற்குஅறிக்கை அளித்துள்ளேன் விரைவில் நிரப்புவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது,

மேலும் இது குறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் விவாதிப்பார்கள் எனவும் விழுப்புரத்தில் நடந்த கொலை குறித்து கேட்டதற்கு தமிழகத்தில் மது, கஞ்சா போன்ற போதை பொருட்கள் அதிகமாக புழங்குவதால் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போதையால் தான் அதிகமாக குற்றங்கள் நடைபெறுகிறது என தெரிவித்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola