விழுப்புரம்: விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் நரிக்குறவ சமுதாயத்தினர் கலை நிகழ்ச்சிகளை முதல் வரிசை இருக்கையில் அமர வைக்கப்பட்டு  கண்டு ரசித்தனர். முதல் வரிசையில் அமர்ந்து நரிக்குறவ சமுதாய பெண்கள் விசில் அடித்து பார்வையிட்டது அனைவரின் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


முதல் வரிசையில் நரிக்குறவர்கள்:


சென்னை ரோகினி திரை அரங்கில் பத்துதல திரைப்படம் பார்க்க வந்த நரிக்குறவ சமூகத்தை சார்ந்த பெண்களுக்கு நேற்று முன் தினம் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடயே பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இதனை அடுத்து திரையரங்க நிர்வாகம் அந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்து அவர்களை திரையரங்கிற்குள் அனுமதித்து திரைப்பாடம் பார்க்க வைத்தனர். இந்நிலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி திடலில் கடந்த 25 ஆம் தேதி முதல் புத்தக திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த புத்தக திருவிழாவில் மாலை நேரங்களில் கல்லூரி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடைபெற்று வருகின்றன.


மக்கள் நெகிழ்ச்சி:


இந்நிலையில் இன்று நடைபெற்ற புத்தக திருவிழா கலை நிகழ்ச்சியில் பொது மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி  மாணவ மாணவிகள் கலந்து கொண்டு  கண்டு ரசித்தனர். கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க  மாவட்ட நிர்வாகம் சார்பில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்ததில் நரிக்குறவக சமூகத்தினர் முதல் வரிசை இருக்கையில் அமர வைத்து  கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். முதல் வரிசையில் அமர்ந்து கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட நரிக்குறவயின சமூக குழந்தைகள் பெண்கள் தன்னை மறந்து மகிழ்ச்சியுடன் விசில் அடித்து பார்வையிட்டு கண்டு ரசித்தனர். நரிக்குற சமுதாயத்தினர் உற்சாகத்துடன் கலை நிகழ்ச்சியை  கண்டு ரசித்தது பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.