விழுப்புரம்: தமிழ் மொழி மீது பற்றியிருந்தால் சமஸ்கிருத மொழிக்கு நான்கு மத்திய பல்கலைகழகத்தை உருவாக்கியதை போல் ஒன்றிய அரசு தமிழ் மொழிக்கு ஒரு பல்கலைக்கழகத்தையாவது உருவாக்கியிருக்க வேண்டும் என எம்.பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கரின் 133வது பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் பழைய பேருந்துநிலையத்திலிருந்து புதியபேருந்து நிலையம் வரை விசிக சார்பில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஜனநாயகம் காப்போம் என்று ஊர்வலமாக வந்து புதிய பேருந்துநிலையம் அருகிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த ஊர்வலத்தில் சனாதனத்திற்கு எதிராகவும், ஒன்றிய அரசுக்கு எதிராகவும் விசிகவினர் முழக்கமிட்டனர்.
ஊர்வலத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இந்தியாவின் வளங்களை கார்ப்ரேட் நணபர்களுக்கு தாறை வார்த்துகொடுத்துக்கொண்டு மோடி செயல்பட்டு கொண்டு இருப்பதாக ஹெண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதால் அதானி நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இந்தியாவின் பொருளாதாரம் நிலைகுலைந்து எல்.ஐ.சி பொதுத்துறை நிறுவனத்தின் பணத்தை அதானியின் நான்கு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்தார். அதானியின் முறைகேடுகளை மூடி மறைக்கவும், அதானியை காப்பாற்றவும் நரேந்திர மோடி அரசு ஈடுபட்டு இந்திய பொருளாதாரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் ஆபத்தாக மாறியுள்ளதால் ஜனநாயகம் காப்போம் என்ற பெயரில் பேரணி நடத்தியுள்ளதாகவும் ஒன்றிய அரசு அதானிக்கு ஆதரவான நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் அதானி மீது விசாரனை நடத்தப்பட வேண்டும் என்றார்.
இந்தியா முழுவதும் மெகா ஊழலான அதானி ஊழல் பாஜக சிக்கி தவித்து வருவதால் இந்த ஊழல் குறித்து நாடாளுமன்றத்தில் பேசினால் பதிவாகிவிடும் என்பதால் தான் பட்ஜெட் கூட்டத்தொடரை ஒருநாள் கூட நடத்தாமல் முடித்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். அதானி ஊழல் பேசியதால் ராகுல்காந்தி பதவி பரிக்கப்பட்டுள்ளதாகவும் ஊழல்களை மறைக்க திசை திருப்பும் வேலை செய்துவருவதாகவும் அதன் ஒரு பகுதி தான் திமுக மீதான சொத்து பட்டியலை பாஜக அண்ணாமலை வெளியிட்டுள்ளதாகவும் அதனை திமுக முறியடிக்கும் என கூறினார்.
தமிழக ஆளுநர் ரவி தமிழ் மொழிக்கு ஆதரவாக பேசி தமிழ் மொழி மீது இந்தி போன்ற எந்த மொழியையும் திணிக்க முடியாது என்று கூறுவது அது பாஜகவின் புதிய தந்திரம் அதன் வெளிப்பாடுதான் ஆளுநர் பேசியது என்றும் உன்மையில் தமிழ் மொழி மீது பற்றியிருந்தால் ஒரே நாளில் நான்கு சமஸ்கிருத மத்திய பல்கலைகழகத்தை உருவாக்கினார்கள் உன்மையில் ஒன்றிய அரசுக்கு தமிழ் மொழி மீது பற்றிருந்தால் ஒரு தமிழ் பல்கலைகழகத்தையாவது வருவாக்கியிருக்க வேண்டும் எனவும் எல் முருகன் வீட்டிற்கு சென்று பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டினை கொண்டாடி வாழ்த்து தெரிவிப்பது வாக்கு வங்கிக்காக தான் என ரவிக்குமார் தெரிவித்தார்.