விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான நரசிம்ம அவதாரமெடுத்து இரணிய மன்னனை வதம் செய்து பிரகலாதனை காக்கும் கதையை நினைவுகூறும் விதமாக ஹோலித்திருநாளை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர் வட இந்தியர்கள்.


இந்த நிலையில், நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இன்று (08-03-2023 ) இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு விடுமுறை அறிவித்துள்ளது. எனவே 08-03-2023 இந்த தேதியில் நோயாளிகள் ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவிற்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கும் போல் இயங்கும். மறுநாள் (09-03-2023) முதல் வெளிப்புற நோயாளிகள் பிரிவுகள் வழக்கம் போல் இயங்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Holi Festival: சேலத்தில் வண்ணங்களை பூசி ஹோலி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண