புதுச்சேரியில் 3 குழந்தைகளுக்கு HMPV பாதிப்பு
புதுச்சேரி மாநிலத்தில் இரண்டு ஐந்து வயது குழந்தைகளுக்கு HMPV பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது ஒரு வயது குழந்தைக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குழந்தை தற்போது நலமுடன் உள்ளதாகவும் புதுச்சேரி சுகாதாரத் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
HMPV பாதிப்பு
சீனாவில் இருந்து பரவ தொடங்கி பேரழிவை ஏற்படுத்திய கொரோனா வைரஸின் தாக்கம், மெல்ல மெல்ல குறைந்து தற்போது தான் உலகம் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், மற்றொரு சுவாச வைரஸான மனித மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) சீனாவில் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், ஆரம்ப நாட்களில் இந்த தொற்று தொடர்பான தகவல்களை சீனா வெளியிடாமல் மறைக்க முயற்சித்துள்ளது. முன்னதாக, கொரோனா தொற்று தொடர்பான தகவல்களையும் சீனா மறைத்ததன் விளைவாகவே, உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
அதேநேரம், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைப்புகள் எச்சரிக்க தொடங்கியுள்ளன. முகமூடிகளை அணிவது மற்றும் கைகளை கழுவுதல் போன்ற சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு வலியுறுத்துகின்றன. இதனிடையே, இன்ஃப்ளூயன்ஸா ஏ, எச்எம்பிவி, மைக்கோப்ளாஸ்மா நிமோனியா மற்றும் கோவிட்-19 உள்ளடக்கிய பல வைரஸ்களின் அதிகரிப்பை சீனா எதிர்கொள்வதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
எச்எம்பிவி வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுகுறித்து, அச்சப்படத் தேவையில்லை என சம்பந்தப்பட்ட மாநிலத்தின் அதிகாரிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில், தமிழ்நாட்டில் 2 பேர் உட்பட இந்தியாவில் 13 ஆக உயர்ந்துள்ளது இந்த வைரஸ் தொற்று பாதிப்பு.
புதுச்சேரியில் 3 குழந்தைகளுக்கு HMPV பாதிப்பு
இந்தவகையில், புதுச்சேரி மாநிலத்தில் இரண்டு ஐந்து வயது குழந்தைகளுக்கு HMPV பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது ஒரு வயது குழந்தைக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குழந்தை தற்போது நலமுடன் உள்ளதாகவும் புதுச்சேரி சுகாதாரத் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்... புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கடும் காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகளுடன் நேற்று முன்தினம் 5 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அந்த சிறுமிக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில் மேலும் இரண்டு ஐந்து வயது குழந்தைகளுக்கு HMPV பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது ஒரு வயது குழந்தைக்கு HMPV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குழந்தை தற்போது நலமுடன் உள்ளதாகவும் புதுச்சேரி சுகாதாரத் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித மெட்டாப்நியூமோவைரஸின் அறிகுறிகள்
- இருமல்
- காய்ச்சல்
- மூக்கு ஒழுகுதல்
- மூக்கடைப்பு
- தொண்டை வலி
- மூச்சுத்திணறல்
- சொறி
மனித மெட்டாப்நியூமோவைரஸ் சிகிச்சை:
மனித மெட்டாப்நியூமோவைரஸுக்கு சிகிச்சையளிக்க வைரஸ் தடுப்பு மருந்துகள் எதுவும் இல்லை. பெரியவர்களிடையே பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நபர் நன்றாக உணரும் வரை அறிகுறிகளை வீட்டிலேயே நிர்வகிக்க முடியும். இருப்பினும், ஒரு நோயாளி கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தால் அல்லது சிக்கல்களை உருவாக்கினால், மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவரை அணுகுவது நல்லது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
- சோப்பு மற்றும் தண்ணீருடன் கைகளை கழுவுதல்.
- தும்மும்போது அல்லது இருமும்போது உங்கள் கைகளை மூக்கு மற்றும் வாயை மூடவும்.
- பிறர் சளி அல்லது பிற தொற்று நோய்களால் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது அருகில் இருப்பதைத் தவிர்க்கவும்.
- நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் மாஸ்க் அணியுங்கள்.
- முகம், கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும்