விழுப்புரம்: திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 680 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதாகவும், திமுக காங்கிரஸ் மீனவர்களின் கொலைகார்கள், ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர்கள் கொலை செய்யப்படவில்லை என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் அக்கட்சியின் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச் ராஜா தலைமையில் நடைபெற்றது.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஹெச் ராஜா...
ஹரியானா, ஜம்மு - காஷ்மீர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமுதாயத்தை ஜாதியை சொல்லி பிரித்து சிறுபான்மையினரை மதத்தின் பெயரால் இணைத்து நாட்டை சிதைத்துவிட வேண்டுமென மனப்பால் குடித்த காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மரண அடி கொடுத்திருக்கிறார்கள். ஹரியானாவில் 2019ல் 40 சீட்டுகள் பெரும்பான்மையாக வெற்றி பெற்று சவுத்தாலா கட்சியிடன் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் இணைத்து கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தாகவும், இந்த முறை அரிது பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. வாக்காளர்களின் வாக்கு சதவிகிதம் 2019 ஆம் ஆண்டு 36 சதவிகிதம் பாஜகவிற்கு இருந்தது இந்த முறை 40 சதவிகிதமாக அதிகரித்து உள்ளதாக கூறினார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் 29 சட்டமன்ற தொகுதியில் பாஜக வெற்றி பெற்றாலும் வாக்கு சதவிகிதத்தில் முதல் இடத்தில் பாஜக அங்கு இருப்பதாக கூறினார். காங்கிரஸ் இந்தியா கூட்டணி கட்சிகள் 370 ரத்து செய்யப்பட்டதிலிருந்து ராணுவத்தினர் துணை ராணுவத்தினர் மீது கல் எறியும் சம்பவங்கள் நிகழவில்லை, மக்கள் அமைதியை விரும்புவதாகவும் மகிழ்ச்சியாக இருப்பதால் எதிர்கட்சிகளின் சூழ்ச்சி முழுமையாக முறியடிக்கபட்டுள்ளது.
தீட்சிதர்கள் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கிரிக்கெட் விளையாடியதை உண்மை தெரியாமல் மருத்துவர் ராமதாஸ் பேசியிருப்பதால் விரைவில் நேரில் சந்திக்க உள்ளேன். அந்த இடம் வருடா வருடம் கும்மி, கோலாட்டம், கரகாட்டம், எல்லாம் நடக்க கூடிய மைதானம் அதனால் அங்கு நடந்ததை தவறாக திமுக, விசிக ஆகிய தீய விரோத சக்திகள் எப்பாடியாவது பொது தீட்சிதர்களுக்கு எதிராக கூற வேண்டுமென தெரிவித்திருப்பதாகவும், இந்து அறநிலையத்துறையின் விஷம தனத்தின் செயல்பாடுகள் என தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு கோஷம் போட்டு அமைச்சர் பதவியை பாதுகாக்க வேண்டுமென காத்துகொள்வதாகவும், திமுக காங்கிரஸ் கூட்டணியில் 680 மீனவர்களை கொல்லப்பட்டதாகவும், திமுக காங்கிரஸ் மீனவர்களின் கொலைகார்கள், ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர்கள் கொலை செய்யப்படவில்லை. கொலைகாரங்க சார் இந்த சர்க்கார் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.