உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பானது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது இதன் காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதேபோல் தமிழகத்திலும் திரையரங்குகள், உணவகங்களில் அமர்ந்து உண்பதற்கு, பேருந்துகளில் பொதுமக்கள் பயணிக்க போன்றவற்றில் 50 சதவிகித மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், வெள்ளி சனி ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு மக்கள் செல்லவும் அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மேலும் நேற்று இரவு முதல் இரவு ஊரடங்கும் அமலாகி தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 



 

இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது, நேற்று முதல் கடலூர் மாவட்டத்தில் உணவகங்கள், திரையரங்குகள் ஆகியவற்றில் 50 சதவிகித மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர், ஆனால் பேருந்துகளில் வழக்கம்போல் பொதுமக்கள் பயணம் செய்து வருவதை காண முடிகிறது இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் நேற்ற இரவு ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி சுற்றித்திரிந்த அவர்களை காவல் துறையினர் முதல் நாள் என்பதால் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர், இனியும் ஊரடங்கு நேரத்தில் வெளியே தேவையின்றி சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு போடப்படும் என எச்சரிக்கை செய்தனர் பின்னர் நேற்று இரவு முதல் தேவை இன்றி இரவில் வெளியே சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

 



 

 

இந்நிலையில் நாளை முழு நேர ஊரடங்கு அமலாக உள்ள நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் அந்த அந்த மாநகராட்சி, நகராட்சிகளில் வாகனங்கள் மூலம் தேவை இன்றி பொதுமக்கள் வெளியே வரக்கூடாது மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மீன் பிடி துறைமுகத்தில் எப்பொழுதும் மீன்கள் வாங்க ஞாயிற்றுகிழமை மக்கள் அதிக அளவில் வருவது வழக்கம் ஆனால், நாளை முழு ஊரடங்கு காரணமாக மீனவர்கள் பிடித்து கொண்டு வந்த மீன்களை இன்றே வாங்கி செல்ல வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் அதிகளவு கூடினர்.

 



 

ஒரே இடத்தில் சுமார் 3000 ஆயிரத்திறக்கு மேற்பட்டோர் சமூக இடைவெளி இன்றி முகக்கவசம் அணியாமல் ஒரே நேரத்தில் குவிந்ததின் காரணமாக  தொற்று அதிகரிக்க அபயாம் ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூறுகையில் மீன்களை விற்பதற்கு தனி தனியாக இடம் பிரித்து அளித்தால் மீனவர்களும், மீன் வாங்க வரும் பொதுமக்களும் சமூக இடைவெளியுடன் மீன் வாங்கி செல்ல ஏதுவாக இருக்கும் என கோரிக்கை வைத்தனர்.