Fishing Port: குஷியில் மீனவர்கள்... ! ரூ.235 கோடியில் மீன்பிடி துறைமுகம் ; அரசு எடுத்த திடீர் முடிவு... எங்கு தெரியுமா ?

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின்‌ தீர்ப்பின்படி, Environmental impact Assessment வேலை முடிவுற்று, Draft EAI அறிக்கை தயார்‌ செய்யும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது.

Continues below advertisement

அழகன்குப்பத்தில் மீன்பிடி துறைமுகம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் 19 மீனவர் கிராமங்கள் உள்ளது. இதுபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 44 மீனவர் கிராமங்கள் இருக்கின்றன. இந்த மீனவர் கிராமங்களில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் உள்ளன. இந்த மீன்பிடி விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்த இரண்டு மாவட்டங்களிலும் இதுவரையில் மீன்பிடி துறைமுகங்கள் இல்லை இதனால் இப்பகுதியில் உள்ள மீனவர்கள் தங்களது மீன்பிடி படகுகளை புயல் மற்றும் அதிகப்படியான கனமழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின் போது பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் என்றால் விழுப்புரம் பகுதியில் உள்ள மீனவர்கள் புதுவை, கடலூர் ஆகிய பகுதியில் உள்ள துறைமுகங்களுக்கு செல்ல வேண்டும்.

Continues below advertisement

இதுபோல் செங்கல்பட்டு பகுதியில் உள்ள மீனவர்கள் சென்னை பகுதியில் உள்ள துறைமுகங்களுக்குத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு இந்த இரண்டு மாவட்ட மீனவர்களும் தங்களது மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பதற்காக எடுத்துச் செல்லும் பொழுது பல்வேறு பிரச்னைகளும், சட்ட சிக்கல்களும் உண்டாகிறது. இதன் காரணமாக இந்த மீனவர்கள் பல நேரங்களில் அவர்களது மீன்பிடி விசைப்படகுகளை கடலிலேயே நிறுத்தி விடுவது வழக்கம். இவ்வாறு கடலில் விசைப்படகுகளை நிறுத்தும் பொழுது சூறாவளி, புயல் போன்றவற்றால் எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. இதுபோல் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மதிப்புள்ள விசைப்படகுகள், மீன்பிடி சாதனங்கள் கடலிலேயே மூழ்கி அழியும் நிலை தொடர்கிறது. இது போன்ற காரணங்களால் மீனவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

ஏற்கெனவே இந்த இரண்டு மாவட்ட மீனவர்களின் நலன் கருதி மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அழகன்குப்பம் பக்கிங்காம் கால்வாயிலும், செங்கல்பட்டு மாவட்ட மீனவர்களுக்கு ஆலம்பராகோட்டை அருகிலும் இரண்டு மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் அரசு சார்பில் ரூபாய் 236 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு

தொடர்ந்து கடந்த ஆண்டு துறைமுகங்கள் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டனர். இந்நிலையில் ஒரு சில தொண்டு நிறுவனத்தினர் தற்பொழுது மீன்பிடி துறைமுகம் அமைய உள்ள பகுதியில் கடல் ஆமைகள் ஆண்டுதோறும் முட்டை இடுவது வழக்கம். இங்கு துறைமுகம் அமைந்தால் கடல் ஆமைகள் இப்பகுதியில் முட்டையிட முடியாது. இதனால் கடல் ஆமைகளின் இனப்பெருக்கம் குறையும். மேலும் இந்த மீன்பிடி துறைமுகங்களால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு உண்டாகும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Draft EAI அறிக்கை தயார்‌ செய்யும்‌ பணிகள்‌ தீவிரம் 

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக்‌ அப்துல்‌ ரஹ்மான்‌ ஆய்வு மேற்கொன்றார், அவர் கூறுகையில், விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ 19 மீனவ கிராமங்கள்‌ 40 கி.மீ நீள கடற்கரையோரத்தில்‌ அமைந்துள்ளன. இம்மாவட்டத்தில்‌ 1292 இயந்திரம்‌ பொருத்தப்பட்ட கண்ணாடி நாரிழை படகுகளும்‌, 20 இயந்திர விசைப்படகுகளும்‌ மீன்பிடி தொழிலில்‌ ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இப்பகுதிகளில்‌ 14935 மீனவர்கள்‌ வசிக்கின்றனர்‌. செங்கல்பட்டு மாவட்டத்தில்‌ 44 மீனவ கிராமங்கள்‌ 87 கி.மீ நீள கடற்கரையோரத்தில்‌ அமைந்துள்ளன. இம்மாவட்டத்தில்‌ 2234 இயந்திரம்‌ பொருத்தப்பட்ட கண்ணாடி நாரிழை படகுகளும்‌, 12 இயந்திர விசைப்படகுகளும்‌ மீன்பிடி தொழிலில்‌ ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இப்பகுதிகளில்‌ 29745 மீனவர்கள்‌ வசிக்கின்றனர்‌.

எனவே, விழுப்புரம்‌ மற்றும்‌ செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்‌ உள்ள மீனவ மக்களின்‌ கோரிக்கைகளை நிறைவேற்றிடும்‌ பொருட்டு, கழுவேலி கழிமுகத்தில்‌ விழுப்புரம்‌ மாவட்டம்‌, அழகன்குப்பத்திலும்‌, செங்கல்பட்டு மாவட்டம்‌, ஆலம்பரைகுப்பத்திலும்‌, மீன்பிடி துறைமுகங்கள் ரூ.235.00 கோடி மதிப்பீட்டில்‌ அமைத்திட தமிழ்நாடு அரசால்‌ நிர்வாக ஒப்புதல்‌ வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது, தேசிய பசுமை திப்பாயத்தின்‌ தீர்ப்பின்படி, Environmental impact Assessment வேலை முடிவுற்று, Draft EAI அறிக்கை தயார்‌ செய்யும்‌ பணிகள்‌ நடைபெற்று வருகிறது. மேலும்‌, சுற்றுச்சூழல்‌ அனுமதி பெறுவதற்கான அனைத்து பணிகளும்‌ நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில்‌, இன்றைய தினம்‌, மரக்காணம்‌ ஊராட்சி ஒன்றியம்‌, அழகன்குப்பத்தில்‌ மீன்பிடி துறைமுகம்‌ அமைப்பது தொடர்பாக நேரில்‌ பார்வையிட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஷேக்‌ அப்துல்‌ ரஹ்மான்‌ தெரிவித்துள்ளார்‌.

Continues below advertisement