நாடு முழுவதும் வரும் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக ஜவுளி, நகை, பட்டாசு உள்ளிட்டவைகளின் வியாபாரம் ஒரு வாரத்திற்கு முன்பே தொடங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையை பொறுத்தவரையில் பட்டாசு முக்கிய பங்கு வகிக்கிறது. தீபாவளி பட்டாசு விற்பனையை நம்பி விருதுநகர் மாவட்டம் சிவகாசி உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் பல லட்சம் தொழிலாளர்கள் பட்டாசு தயாரித்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பல இடங்களில் தீயணைப்புத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் பட்டாசு கடைகள் வைக்கப்பட்டுள்ளன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் முருகன் என்பவர் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்வதற்கு பட்டாசுகளை இறக்குமதி செய்து விற்பனை செய்து வந்தார் இந்த நிலையில் எதிர்பாராத விதமாக தீ பொறி ஆனது பட்டாசு கடையில் பட்டு தீ விபத்து ஏற்பட்டது.  முருகன் மற்றும் அவரது கடை ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைத்து முயற்சி செய்தனர்  இருப்பினும் கடையில் தீ மளமளவென பரவியது.




இதனால் அந்த கடையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடிக்கத் தொடங்கியது.  தீ பிழம்பு போல அந்த பகுதி காட்சியளித்தது. இதில் அக் கடையில்  பணி புரிந்த 4 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 10க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முருகன் பட்டாசு கடை அருகில் இருந்த பேக்கரி கடையில் பயன்படுத்தி வந்த மூன்று சிலிண்டர்கள் வெடித்துள்ளது  என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்த நிலையில் சங்கராபுரம் பகுதியில் பெரும் தீ பிழம்பு சூழப்பட்டிருக்கிறது.




மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ரிஷிவந்தியம் ஆகிய தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சங்கராபுரத்தில் பட்டாசு ஆலை விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு கடை வைத்து வந்தால் உடனடியாக அனைத்து கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மேலும் பட்டாசு கடை விபத்து நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.


 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர