விழுப்புரம்: சென்னை தூத்துக்குடி மக்கள் பாதித்தால் ஆராயிரம் வழங்கும் தமிழக அரசு ஏன் வடமாவட்ட மக்கள் பாதித்தால் 2 ஆயிரம் அறிவிக்கிறார்கள்... ஏன் இந்த வன்மம் ? தமிழக அரசு கால்ஷீட் அரசாங்கமாகவும் விளம்பரம் செய்யும் அரசாங்கமாக உள்ளது அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.


தேவனூரில் பாமக சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ முகாம்


விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே தேவனூரில் பாமக சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் பார்த்தார். அப்போது, பெண் ஒருவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரிகள் எதும் செய்து தரவில்லை என்றும் வேறு இடத்தில் இருந்து பாதிக்கப்பட்ட இடத்தில் வாடகை எடுத்து தங்கியுள்ளவர்களுக்கு நிவாரண தொகை வழங்கமாட்டோம் என அதிகாரிகள் தெரிவிப்பதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அன்புமனி ராமதாஸிடம் முன் வைத்தார். 


அதனை தொடர்ந்து பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ்...


ஃபெஞ்சல் புயலில் முன்னறிவிப்பு இல்லாமல் சாத்தனூர் அணை திறக்கப்பட்டதால் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டு ஆயிரகணக்கான மக்கள் பாதிகப்பட்டுள்ளதாகவும் இதற்கு முழு பொறுப்பு அரசு ஏற்க வேண்டும், திறமையற்ற அரசாக திமுக அரசு செயல்படுகிறது. வெள்ளம் வந்ததால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், வெள்ள நிவாரணம் 2 ஆயிரம் அறிவித்ததை விட கூடுதலாக அறிவிக்க வேண்டும் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர்களுக்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது 6 ஆராயிரம் வழங்கிய அரசு விழுப்புரம் கடலூர் மாவட்டத்திற்கு 2 ஆயிரம் அறிவிக்கிறார்கள். இதில் என்ன பாகுபாடு பார்த்து நிவாரணம் வழங்குகிறார்கள் ?.


திமுக அரசு விளம்பரம் செய்யும் அரசாங்கமாக உள்ளது..


முன்னெச்சரிக்கையாக சாத்தனூர் அனையிலிருந்து நீர் திறக்கப்படவில்லை என்றும் வெள்ளத்தால் உயிரிழந்ததற்கு ஸ்டாலின் அரசுதான் முழு பொறுப்பேற்க வேண்டும், வடமாவட்ட மக்கள் மீது ஏன் வன்மம்.. இந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டால் இரண்டாயிரம், சென்னை தூத்துக்குடி மக்கள் பாதித்தால் ரூ.6 ஆயிரம் வழங்குகிறார்கள், மக்கள் துயரத்தில் எல்லாத்தையும் இழந்து உள்ளார்கள் எல்லாம் மழையில் அடித்து செல்லப்பட்டது. இது என்ன கால்ஷீட் அரசாங்கமாக உள்ளது, விளம்பரம் செய்யும் அரசாங்கமாக உள்ளது.


அதானி சித்தரஞ்சன் தெருவில் வந்து டீ குடிச்சிட்டு  போய் இருக்கிறார்


ஒன்றிய அரசு தமிழகத்திற்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நிவாரணமாக 20 ஆயிரம் கோடி வழங்க வேண்டும், மத்திய அரசு பணம் கொடுத்தால்தான் நிவாரணம் கொடுப்போம் என்றால் எதற்கு தமிழக அரசாங்கம் உள்ளது. பேரிடர் நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். திமுக அரசு மீது மக்கள் கோவத்தில் உள்ளதாக கூறினார். அதானி தமிழக  முதலமைச்சரை சந்தித்தார் என்ற கேள்விக்கு அதானி சென்னை சித்தரஞ்சன் தெருவில் வந்து டீ குடிச்சிட்டு போய் இருக்கிறார்  என பதிலளித்தார். விளம்பரம் அரசியல் பாமக செய்வதில்லை களத்தில் இருந்து மக்கள் பணி செய்து கொண்டு இருப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து, விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகில், தக்காமேடு இருளர் இன பழங்குடியினர் வசிக்கும் பகுதியில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை இதுவரை யாரும் சந்திக்காத நிலையில், அவர்களை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து நிவாரணம் உதவிகள் வழங்கி ஆறுதல் கூறினார்.