கல்வியும், சுகாதாரமும் தமிழக முதலமைசரின் இரண்டு கண்களாக உள்ளதாகவும், தினமும் காலையில் ஒருமணி நேரம் யோகா, நடைபயிற்சியினை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் எனவும் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டு ஊராட்சி துறை அலுவலர்களுக்கான மருத்துவ முகாம் விழுப்புரத்திலுள்ள  தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமினை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் எம்பி ரவிக்குமார், திமுக எம்எல்ஏ லட்சுமணன், பாமக  எம்எல்ஏ சிவக்குமார் ஆட்சியர் மோகன் உள்ளிட்ட ஏராளமான பயணாளிகள் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து மேடையில் பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி நான் தினமும் இரத்த பரிசோதனை செய்து வருகிறேன், அதோ போல் மக்கள் அனைவரும் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என்றும்


கல்வியும், சுகாதாரமும் எனது இரண்டு கண்கள் என முதல்வர் கூறியுள்ளதாக தெரிவித்தார். மக்கள் நலனில் அக்கறை கொண்டு கல்வி மற்றும் சுகாதாரத்தில் தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் சாலையில் விபத்து நடந்தால் உடனடியாக சிகிச்சை கிடைக்கவேண்டும் என்பதற்காக தான் இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தை கொண்டு வரப்பட்டதாகவும் தினமும் காலையில் ஒருமணி நேரம் யோகா, நடைபயிற்சி ஆகியவற்றை அனைவரும் செய்ய வேண்டும் என கூறினார். கிராம மக்கள் 4 மாதத்திற்கு ஒரு முறை உடல் முழு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் மழை காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அரசு அதிகாரிகள்,அரசு ஊழியர்கள் மழைகாலத்தில் கவனமாக செயல்பட்டு மக்களை காக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதால் வருமுன் காப்போம் திட்டத்தை முழுமையாக தமிழக முதலமைச்சர் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.