Puducherry Power Cut (09.09.2025): புதுச்சேரியில் உள்ள துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக இன்று 09.09.2025 செவ்வாய்க்கிழமை கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் 3 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Continues below advertisement

லாஸ்பேட்டை மின் பாதை

மின் தடை பகுதிகள்: 

  • பிரியதர்ஷினி நகர் (ஒரு பகுதி)
  • காமராஜர் நகர்
  • குருநகர்
  • ராஜீவ் நகர்
  • ஆதிகேசவர் நகர்
  • சிவாஜி நகர்
  • இந்திரா நகர்
  • அன்னை நகர்
  • நாவற்குளம்
  • குறிஞ்சி நகர் விரிவாக்கம்
  • அன்னிபெசன்ட் நகர்
  • அவ்வை நகர் (ஒரு பகுதி)
  • உயர் மின் அழுத்த நுகர்வோர்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்தடை செய்யப்படுகிறது. இந்த பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

குரும்பாப்பேட் மின் பாதை

மின்தடை பகுதிகள்

  • ராகவேந்திரா நகர்
  • குரும்பாப்பேட் தொழிற்பேட்டை (ஒரு பகுதி)
  • குரும்பாபேட் வீட்டு வசதி வாரியம்
  • அய்யன்குட்டிபாளையம்
  • அமைதி நகர்
  • சிவசக்தி நகர்
  • தருமாபுரி
  • தனகோடி நகர்
  • கல்கி நகர்
  • செந்தில் நகர்
  • அகத்தியர் கோட்டம்
  • அருணா நகர்
  • வள்ளலார் நகர்
  • வருவாய் கிராமம்
  • கணபதி நகர்
  • முத்திரையர்பாளையம்
  • காந்திதிருநல்லூர்
  • டாக்டர் தனபால் நகர்
  • வழுதாவூர் சாலை
  • மேட்டுப்பாளையம் முதல் குரும்பாப்பேட் வரை
  • கோபாலன் கடை சாலை (ஒரு பகுதி)
  • மின் அழுத்த நுகர்வோர்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

இந்த பகுதிகளுக்கு இன்று மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என மின்துறை அறிவித்துள்ளது எனவே பொதுமக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளுமாறும் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மின்சார நிறுத்தம்

மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.

Continues below advertisement

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.

  • துணை மின் நிலைய சேவைகளை ஆதரித்தல்
  • துணை மின்நிலைய பழுது மற்றும் பராமரிப்பு
  • துணை மின்நிலைய சோதனை & செயல்பாட்டுக்குக் கொண்டுவருதல்
  • துணை மின் நிலைய ஆட்டோமேஷன் அமைப்பு சோதனை மற்றும் ஆணையிடுதல்
  • மின்மாற்றி பழுதுபார்ப்பு & சேவை
  • தொழிற்சாலை சர்க்யூட் பிரேக்கர் பழுதுபார்ப்பு
  • பாதுகாப்பு சோதனை
  • இரண்டாம் நிலை துணை மின்நிலைய சோதனை