விழுப்புரம் : இந்தி தெரியாததால் பிரதமரின் நலிவுற்றோர் நலன் குறித்த கருத்தரங்கினை விழுப்புரத்தில் திமுகவின் மாவட்ட ஊராட்சி குழு மற்றும் ஒன்றிய குழு பிரதிநிதிகள் புறக்கணித்து வெளியேறியதால் அரசு அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனர். காலியான இருக்கைகளுடன் கருத்தரங்கு நடைபெற்றதால் வெறிச்சோடி காணப்பட்டன.


Suicide : கள்ள உறவில் தகராறு.. கட்டுமானப் பணியாளர் காதலி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை


பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் பத்து கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 21 ஆயிரம் கோடி மின்னனு முறையில்  வழங்குதல் மற்றும் நல திட்ட பயனாளிகளுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் காணொளி வாயிலாக நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக  விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்திலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் காணொளி வாயிலாக பிரதம மந்திரி நலிவுற்றோர் நலன் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.


Annamalai As Actor : நடிகராக அவதாரம் எடுத்த அண்ணாமலை ! சம்பளம் எவ்வளவு தெரியுமா?




இந்த விழாவில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர்கள், ஒன்றிய குழு பெருந்தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பயணாளிகள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதிலிருந்து காணொளி கருத்தரங்கு முழுவதும் இந்தியில் சென்றது.  இந்தா நிகழ்வினை  மொழி பெயர்பாளர்கள் யாரும் மொழி பெயர்ப்பு செய்யாததால் எதுவும் புரியாமல் அமர்ந்திருந்த திமுக மாவட்ட ஊராட்சி குழு பிரதிநிதிகள், ஒன்றியகுழு பிரதிநிதிகள் இந்தி தெரியாததாலும், புரியாததாலும் புறக்கணிப்பதாக கூறி கருத்தரங்கினை புறக்கணித்து சென்றனர்.


புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி - கலால் துறை அறிவிப்பு




 




Ponmudi Latest Speech : பிரதமரிடம் முதலமைச்சர் கேட்டதில் என்ன தவறு?..கொதித்தெழுந்த அமைச்சர் பொன்முடி


இதனையடுத்து கருதரங்கில் இருந்த இருக்கைகள் காலியாக காட்சியளித்தன. அதன் பின்னர் அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட  ஆட்சியர் மோகன் மட்டும் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். திமுகவினர் இந்தி தெரியாததால் பிரதமரின் காணொளி கருத்தரங்கினை புறக்கணித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண