Diwali 2023 Wishes in Tamil: தீபாவளி நவம்பர் 12-ம் தேதி (ஞாயிற்று கிழமை ) கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் பண்டிகை தினத்தன்று விடுமுறை அறிவிக்கப்படும். பல்வேறு மாநிலங்களில் தீபாவளி விரத காலம் கடைப்பிடிக்கப்படுகிறது. தீபாவளி முடிந்தும் நவம்பர், 14, 15 -ம் தேதிகளில் கோவர்தன் பூஜை, பாய் டூஜ் உள்ளிட்டவைகளும் கொண்டாடப்படுகின்றன. நவம்பர் 12-ம் தேதி ராகு காலம் தவிர்த்து மற்ற நேரங்களில் இறைவனுக்கு பூஜை செய்ய உகந்த நேரமாக சொல்லப்படுகிறது. விநாயகரையும், லக்ஷ்மியையும் பூஜித்து ஆசியை வேண்டுவது நலம். மோதக், அல்வா ஆகியனவற்றை செய்து படைப்பார்கள். பூஜை முடிந்த பின்னர் விளக்கேற்றி, பட்டாசுகள் வெடித்து தீய சக்திகளை விரட்டலாம் என்றும் நம்பப்படுகிறது.
புதுவித அறிமுகமான தல தீபாவளி பட்டாசு தொகுப்பு
விழுப்புரம் மாவட்டம் கேகே ரோட்டில் அமைந்துள்ள பட்டாசு கடையில் இந்த வருடம் புதுவித அறிமுகமான தல தீபாவளி கொண்டாடும் தம்பதிகளுக்கு சூட் கேஸில் அடங்கிய பட்டாசு தொகுப்பு விற்பனைக்கு வந்துள்ளது. தீபாவளியன்று காலை எண்ணெய் குளியல், இனிப்பு வகைகள், பட்டாசு ஆகியவை தான் ஞாபகத்திற்கு வரும் . தீபாவளி என்றாலே பட்டாசுகளை வெடித்து மக்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள். எங்க பார்த்தாலும் ஒரு பட்டாசு வெடிக்கும் சத்தமாக நான் காதுகளில் கேட்கும். இந்நிலையில் வரும் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில்,அனைத்து பகுதிகளிலும் பட்டாசுகள் விற்பனை தீவிரமாகியுள்ளது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் கே கே ரோட்டில் அமைந்துள்ள பட்டாசு கடைகளில் குழந்தைகள் மற்றும் தல தீபாவளி கொண்டாடும் இளம் தம்பதிகள் கவரும் வகையில் இந்த வருடம் புதுவிதமான பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது என கடை உரிமையாளர் தெரிவித்தார்.
புதிய ரக பட்டாசு அறிமுகம்
அதாவது, லயன், டக், சாக்லேட் வடிவில், கிண்டர் ஜாய், டைரி மில்க், மில்கி பார், பார்பி, சின் சான், ஸ்பைடர் மேன், கிரிக்கெட் பால் வடிவில், மேட் ஆங்கிள்ஸ், ராவணன் போன்று குழந்தைகள் மனதை கவரும் வகையிலும்,இளம் தம்பதிகள் தல தீபாவளி கொண்டாடும் வகையில் ஒரு சூட் கேஸில் பலரகமான பட்டாசுகளை வைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்த சூட்கேஸ் 4000 ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் என்ற விலையில் உள்ளது. அதுமட்டுமல்லாமல் அந்த சூட் கேஸில் ஃபேன்சி ஐட்டம்ஸ் பட்டாசுகள் போன்ற பல ரகங்கள் உள்ளது என பட்டாசு உரிமையாளர் தெரிவித்தார். மேல பொதுமக்கள் பட்டாசு வகைகளில் வித்தியாசமான ரகங்கள் பல உள்ளதால் பொதுமக்கள் அதிகளவில் வருகை புரிகிறார்கள் என கடை உரிமையாளர் தெரிவித்தார்.
தீபாவளி அலங்காரம்
தீபாவளி வந்தாச்சு புத்தாடைகள் வாங்குவது, இனிப்பு, பல்கார வகைகள் செய்வது என நம் அனைவரின் வீடுகளிலும் பிஸியாக வேலைகள் நடந்து கொண்டிருக்கும். தீபாவளி நேரத்தில் வீட்டை அலங்கரிக்க ரொம்ப பெரிய மெனக்கடல் இல்லாமல் சின்ன சின்ன பொருட்களை வைத்து தீபாவளி நாளன்று நம் வீட்டை ஜொலிக்க செய்யலாம். வீட்டில் விளக்கு ஏற்றி வைப்பது, மலர் மாலைகள் என உங்கள் மனதிற்கு ஏற்றார்போல அலங்கரிக்கலாம்.
தீபாவளி விரதம்: தீபாவளி நாளில் லட்சுமியை வணங்கி விரதம் இருப்பது எல்லா நலன்களையும் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. காலையில் எழுந்து குளித்து விரதம் இருந்து, சிறப்பு பூஜை செய்யலாம்.