விழுப்புரம்: விழுப்புரத்தில் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி ரூ.4 கோடி அளவிற்கு மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட ஏஜெண்ட்டுக்கள் புகார் மனு அளித்தனர்.


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சபரிவாசன் என்ற நிறுவனம் தீபாவளி பண்டு சீட்டினை கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக அப்பகுதியை சார்ந்தவர்களிடம் பிடித்து வந்தது. பண்டு சீட்டினை நடத்தி வரும் மகேஷ் என்பவர் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 3500 நபர்களிடமிருந்து ரூ. 4 கோடி அளவிற்கு ஒரத்தூர், திண்டிவனம், பொன்னங்குப்பம், வீடுர், மேலக்கொந்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து சீட்டு கட்டியவர்களுடம் பணம் பெற்றுள்ளனர்.


இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் பண்டு சீட்டு நடத்திய மகேஷ் தனது நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பண்டு சீட் ஏஜெண்டுகள் மகேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி விழுப்புரம் எஸ் பி அலுவலகத்தில் ஒன்று திரண்டு மனு அளித்தனர். இதே போன்று விழுப்புரம் கள்ளக்குறிச்சி, கடலூர் போன்ற மாவட்டங்களிலும் சபரிவாசன் பெயரில் பண்டு சீட்டுகள் நடத்தி மோசடியில் டில்லி ராஜன்,புருஷோத்தமன், செந்தில்நாதன், மகேஷ் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.


ALSO READ | Crackers Bursting Time: 2 மணி நேரம்தான்.. கவனமாக இருங்கள் - பொதுமக்களுக்கு காவல்துறை அட்வைஸ்!