தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை சந்தையில்  ஒரே நாளில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தென் மாவட்டங்களில் ஆடுகள் விற்பனை அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை  ஆட்டுச் சந்தைகள் புகழ் பெற்றது. இந்த சந்தைகளுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் ஆட்டு சந்தை நடைபெறுகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கி செல்கின்றனர். வரும் திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு இன்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை வாங்குவதற்காக வந்தனர். ஒரு ஆட்டின் விலை ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரையில் விற்பனையானது. இன்று நடைபெற்ற ஆட்டு சந்தையில் ரூ.3 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் ஆடுச்சந்தை விற்பனை அதிகரித்துள்ளது.


தருமபுரி மாவட்டத்தில் உள்ளூர் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர். வழக்கமாக 50 லட்சம் வரை கால்நடைகள் விற்பனையான நிலையில் இன்று தீபாவளி பண்டிகையையொட்டி 3 கோடிக்கு ஆடுகள் மற்றும் நாட்டு கோழிகள் விற்பனையானது. வழக்கத்தை விட ஆடு,கோழிகள் விலையும் உயர்ந்துள்ளது.


கடலூர் மாவட்டத்தில் ஆந்திரா மகே,யானம் மற்றும் கேரளாவிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர். வழக்கமாக 15 லட்சம் வரை கால்நடைகள் விற்பனையான நிலையில் இன்று தீபாவளி பண்டிகையையொட்டி 2 கோடிக்கு ஆடுகள் மற்றும் நாட்டு கோழிகள் விற்பனையானது. வழக்கத்தை விட ஆடு,கோழிகள் விலையும் உயர்ந்துள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் முழுவதும் இன்று ஒரே நாளில் சுமார் 4 கோடிக்கும் மேல் ஆடுகள் விற்பணை ஆகியுள்ளதாக ஆடுச்சந்தையில் விற்பனை ஆகியுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.