விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு வகைகளை தயார் செய்வதற்கு, முன்னர் பூஜை போட்டு இனிப்பு கார வகைகளை செய்ய ஆரம்பித்த கடை உரிமையாளர்கள். இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று தான் தீபாவளி. தீபாவளி என்றாலே எண்ணெய் குளியல், இனிப்பு வகைகள், ஸ்வீட்ஸ், பட்டாசு தான் பொதுமக்களுக்கு ஞாபகம் வரும். புத்தாடை உடுத்தியும், இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் மக்கள் உற்சாகமாக கொண்டாடும் பண்டிகை தான் தீபாவளி. இந்த மாதம் தீபாவளி நவம்பர் 12ஆம் தேதி வருவதால் அனைத்து பகுதிகளிலும் இனிப்பு வகைகள் செய்ய ஆரம்பித்துள்ளனர் கடை உரிமையாளர்கள்.




அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் பாணாம்பட்டு சாலையில் அமைந்துள்ள ஆர் கே ஸ்னாக்ஸ்  கடை உரிமையாளர் மற்றும் பணிபுரியும் ஊழியர்கள், தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வகைகளை தயார் செய்வதற்கு முன்னாளில் இனிப்பு வகைகள் செய்ய பயன்படுத்தப்படும் உபகரணங்கள் வைத்து பூஜை செய்த பிறகு  இனிப்பு வகைகளை செய்ய ஆரம்பித்தனர். முதலவதாக  இனிப்பு வகைகளில் ஒன்றான லட்டுவை செய்து தீபாவளி இனிப்பு வகைகளை செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் இவை அனைத்தும் விறகு அடுப்பில் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.


தீபாவளி பூஜை


நவம்பர் 12-ம் தேதி ராகு காலம் தவிர்த்து மற்ற நேரங்களில் இறைவனுக்கு பூஜை செய்ய உகந்த நேரமாக சொல்லப்படுகிறது. விநாயகரையும், லக்‌ஷ்மியையும் பூஜித்து ஆசியை வேண்டுவது நலம். மோதக், அல்வா ஆகியனவற்றை செய்து படைப்பார்கள். பூஜை முடிந்த பின்னர் விளக்கேற்றி, பட்டாசுகள் வெடித்து தீய சக்திகளை விரட்டலாம் என்றும் நம்பப்படுகிறது.




தீபாவளி அலங்காரம்


தீபாவளி வந்தாச்சு; புத்தாடைகள் வாங்குவது, இனிப்பு, பலகார வகைகள் செய்வது என நம் அனைவரின் வீடுகளிலும் பிஸியாக வேலைகள் நடந்து கொண்டிருக்கும். தீபாவளி நேரத்தில் வீட்டை அலங்கரிக்க ரொம்ப பெரிய மெனக்கடல் இல்லாமல் சின்ன சின்ன பொருட்களை வைத்து தீபாவளி நாளன்று நம் வீட்டை ஜொலிக்க செய்யலாம். வீட்டில் விளக்கு ஏற்றி வைப்பது, மலர் மாலைகள் என உங்கள் மனதிற்கு ஏற்றார்போல அலங்கரிக்கலாம். தீபாவளி  பண்டிகையில் இடம்பெறும் அதிரசம், பாதுஷா, ஜாங்கிரி முறுக்கு, லட்டு போன்ற அனைத்து வகையான இனிப்பு வகைகளை செய்து உள்ளூர்களிலும், வெளி மாவட்டங்களுக்கும் விற்பனை செய்து வருகின்றனர்.