தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து அவதூறாக விமர்சித்து பேசியதாக எழுந்த புகாரில் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.


விழுப்புரம்  மாவட்டம், செஞ்சியைடுத்த நாட்டார் மங்கலத்தில் கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்திலும், 10 ஆம் தேதி ஆரோவில் அருகே நடைபெற்ற கூட்டதிலும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் எம்.பி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தமிழக அரசையும், தமிழ்நாடு முதலமைச்சரையும் தரக்குறைவாகவும், அவதூறாகவும் விமர்சித்து பேசியதாக புகார் எழுந்தது.


இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும், குற்றவியல் நீதிமன்றத்திலும் அரசு வழக்கறிஞர் சுப்பரமணியம் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் நேரில் ஆஜராகும்படி நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்ட நிலையில் 9.10.2023 சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜராகினார். இதனைதொடர்ந்து வழக்கினை விசாரித்த நீதிபதி பூர்ணிமா வழக்கு விசரானை 6.11.2023 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


இந்த நிலையில் இன்று  மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.  தொடர்ந்து வழக்கு விசாரனை 21.11.2023 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.