திருவண்ணாமலை மாவட்டத்தில் 2022-23 காரீப் சம்பா பருவத்தில் 2-ம் கட்டமாக 9 தாலுகாக்களில் 31 மையங்கள் மூலம் நெல் கொள்முதல் 16-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் செய்யப்பட உள்ளது. இதற்கான இணையவழி முன்பதிவு வரும் 15-ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. 2022-23-ம் ஆண்டிற்கு தமிழக அரசு சன்ன ரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றிற்கு ரூ.100 உயர்த்தி ரூ.2 ஆயிரத்து 160-ம், இதர ரகங்களுக்கு ரூ.75 உயர்த்தி ரூ.2 ஆயிரத்து 115-ம் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை தாலுகாவில் நார்த்தாம்பூண்டி, கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் காடகமான், தண்டராம்பட்டு தாலுகாவில் மேல்கரிப்பூர், போளூர் தாலுகாவில் எடப்பிறை, ஆரணி தாலுகாவில் அரியாப்பாடி, வெம்பாக்கம் தாலுகாவில் கீழ்நெல்லி, அரியூர், மாமண்டூர், தூசி, வெம்பாக்கம், வெங்களத்தூர், அழிவிடைதாங்கி, நாட்டேரி, தென்னம்பட்டு, பிரம்மதேசம், சுனைப்பட்டு, பெருங்காட்டூர், செய்யாறு தாலுகாவில் எச்சூர், வெங்கோடு, தவசி, ஆக்கூர், தேய்த்துறை, ஆலாத்தூர், பெருங்குளத்தூர், புளியரம்பாக்கம், மேல்சீசமங்கலம், மேல்மா, கடுகனூர், வந்தவாசி தாலுகாவில் நல்லூர், பொன்னூர், சேத்துப்பட்டு தாலுகாவில் நம்பேடு ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படு இறக்கப்பட உள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய வரும் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் சான்றினையும், உதவி வேளாண்மை அலுவலரிடம் மகசூல் சான்றினையும் அடங்கலை பெற வேண்டும். பின்னர் விவசாயிகள் நேரடி கொள்முதல் மையத்திற்கு மேற்குறிப்பிட்ட சான்றுகள், ஆதார், சிட்டா மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றினை நேரில் கொண்டு சென்று இதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ள நேரடி கொள்முதல் மைய அலுவலரிடம் அளிக்க வேண்டும்.

Continues below advertisement

நேரடி நெல் கொள்முதல் மைய அலுவலர் விவசாயிகள் அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்வார். பதிவுகள் மேற்கொண்ட பின்னர் சம்பந்தப்பட்ட விவசாயியின் பதிவு செய்த செல்போன் எண்ணிற்கு வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டது என்ற குறுஞ்செய்தி விவசாயிகளின் தொலைபேசிக்கு அனுப்பப்படும். பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரம் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு அவரால் பதிவு செய்துள்ள விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஒப்புதல், நிராகரிப்பு செய்யப்படும். என இவ்வாறு மாவட்ட ஆட்சியர்  வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருந்தது. 

 

Continues below advertisement

நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.