கடலூர் அருகே புது வண்டி பாளையத்ததில் பிரசிதி பெற்ற 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வரவூர் மாரியம்மன் கோயில் உள்ளது இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் சித்தரியை திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை செடல் உற்சவம் நடைபெற்றது.  இந்த செடல் உற்சவத்தில் பல்லாயிர கணக்கான பக்தரகள் கலந்து கொண்டு தாங்கள் வேண்டிக்கொண்ட வேண்டுதலை நிறைவேற்றினர். இதில் 50 க்கு மேற்ப்பட்டோர் செடல் மற்றும் அக்னிசட்டி ஏந்தி வேண்டுதலை நிறைவேற்றினர். இவை அனைத்தும் பெரும்பாலன கோயில்களில் கொண்டாடப்படும் சங்குகள் என்றாலும் இந்த கோயிலில் மட்டும் விசேஷமாக நடைபெறும் வேண்டுதல் ஒன்று உள்ளது. அது இந்த கோவிலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்களை இந்த சன்னதியில் உயிர் பிச்சை கொடுக்குமாறு வேண்டுதல் கோரி உயிர் பிச்சை கொடுத்தால் பிணம் போல் படுத்து கொண்டு பாடை காவடி எடுப்பதாக மக்கள் வேண்டி கொண்டு காவடி எடுப்பது வழக்கம் அதே போல் இந்த வருடம் 10 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டவர்கள் இந்த அம்மன் சன்னதியில் பாடையில் படுத்துக் கொண்டு வீதியாக ஊர்வலமாக சென்று பின்னர் சன்னதிக்கு வந்து தங்ஙள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
  

 



 

அதில் வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர் ஒருவர் கூறும் போது எனது கணவர் கடந்த வருடம் இதய நோயால் பாதிக்கப்பட்ட போது அம்மனிடம் உயிர் பிச்சை கேட்டு வேண்டினேன் கணவன் உயிர் பிழைத்து வந்தத்தை அடுத்து இன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மீண்டு வந்த கணவனை கொண்டு பாடை படுக்க வைத்து பாடை காவடி எடுத்து ஊரை சுற்றி வந்து வேண்டுதலை நிறைவேற்றினேன் என்றார். 

 



 

இதே போல வருடா வருடம் இத்தகைய பாடை காவடி எடுப்பது அதிகரித்து கொண்டு வருகிறது. சித்திரை மாதம் தொடங்கிய முதல் பல்வேறு கோயில்களிலும் பல்வேறு விதமான திருவிழாக்களும் அதில் பல்வேறு விதமான வேண்டுதல்களும் நிறைவேற்றப்பட்டு வரும் சூழலில் கடலூர் பகுதியிலும் பல கோயில்கலில் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இது போன்ற பாடை கட்டி காவடி எடுக்கும் வேண்டுதல் பெரும்பாலன மக்களுக்கு வியப்பாகவும் பக்தர்களை உடல் சிலிர்க்க வைக்கும் விதமாகவும் உள்ளது. ஆனாலும் இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.