கள்ளக்குறிச்சி மாவட்ட தனி துணை ஆட்சியர் ராஜாமணி. இவர் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை ஆட்சியராக பணியாற்றி வந்தார். சங்காரபுரம் மாறும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வதற்காக இன்று காலை கள்ளக்குறிச்சியில் இருந்து அரசு வழங்கிய காரில் தனி துணை ஆட்சியர்  ராஜாமணி சென்று கொண்டிருந்தார். சங்கராபுரம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக கார் டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.




அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த துணை ஆட்சியரின் கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரிகள் மீது மோதி, பின்னர் சாலையோரமாக இருந்த மின் கம்பத்தில் அதிவேகமாக மோதி நின்றது. இந்த விபத்தில் காரில் பயணித்த தனி துணை ஆட்சியர் ராஜாமணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணம் செய்த 5 பேர் படுகாயமடைந்தனர்.


 






தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் காயம் அடைந்த 5 பேரை மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.பின்னர், உயிரிழந்த தனி துணை ஆட்சியர் ராஜாமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் டயர் வெடித்த விபத்தல் தனி துணை ஆட்சியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண