கள்ளக்குறிச்சி : திருக்கோவிலூர் அருகே இறந்த தந்தையின் மெழுகு சிலை முன்பு நடந்த மகளின் திருமணம் நடந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தனகனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி. இவருடைய கணவர் செல்வராஜ் (வயது 56). கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக செல்வராஜ் உயிரிழந்தார். இந்த நிலையில், செல்வராஜின் இளைய மகள் மகேஸ்வரிக்கும், திருக்கோவிலூரில் அச்சகம் வைத்து நடத்தி வரும் ஜெயராஜ் என்பவருக்கும் இன்று திருமணம் நடந்தது.


Ponmudi Latest Speech : பிரதமரிடம் முதலமைச்சர் கேட்டதில் என்ன தவறு?..கொதித்தெழுந்த அமைச்சர் பொன்முடி


உயிருடன் இருக்கும் போது மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என செல்வராஜ் திட்டமிட்டிருந்த நிலையில், அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தந்தை மீது அதிக பாசம் கொண்ட மகேஸ்வரி தனது திருமணத்துக்கு தந்தை இல்லையே என சோகத்தில் இருந்துள்ளார். தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில், செல்வராஜின் குடும்பத்தினர் ரூபாய்.5 லட்சம் செலவில் அவரின் மெழுகு சிலையை தயாரித்தனர். செல்வராஜுக்கு பட்டு வேஷ்டி, சட்டை அணிந்து அமர்ந்து இருப்பதுபோல் மெழுகுசிலை தத்ரூபமாக உருவாக்கினார்கள்.


Annamalai As Actor : நடிகராக அவதாரம் எடுத்த அண்ணாமலை ! சம்பளம் எவ்வளவு தெரியுமா?


Suicide : கள்ள உறவில் தகராறு.. கட்டுமானப் பணியாளர் காதலி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை


இந்த சிலையை புரோகிதர்கள் முன் வைத்து திருமண சடங்குகள் நடந்தது. அப்போது பெற்றோர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற மகேஸ்வரி, தந்தை செல்வராஜியின் மெழுகுசிலையை பார்த்து கண்ணீர் விட்டார். திருமணத்துக்கு வந்த உறவினர்கள், இதைப் பார்க்கும்போது சிலை மாதிரி தெரியவில்லை, செல்வராஜே நேரில் வந்தது போல் இருந்தது என நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






 



 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி - கலால் துறை அறிவிப்பு


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண