விழுப்புரம் : மரக்காணத்தில் அமைச்சர் மஸ்தான் ஆய்வு மேற்கொண்டு வண்டிபாளையம் கழுவெளி பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல்.


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது, கனமழையினால் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ் மஸ்தான் மரக்காணம் பேரூராட்சி மற்றும் மரக்காணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார், இதனை தொடர்ந்து அனுமந்தை கிராம மாரியம்மன் கோவில் தெருவில் தாழ்வான பகுதியில் வசித்து வந்த 53 பேர் மீட்கப்பட்டு அனுமந்தை அரசு பள்ளியில் தங்க தங்கவைதுள்ளனர்.  இவர்களை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அமைச்சர் மஸ்தான், ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து, அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் தடையின்றி கிடைக்கின்றனவா என கேட்டறிந்தார், இதனை தொடர்ந்து அமைச்சர் மஸ்தான் அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.


செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மஸ்தான் கூறியதாவது:-


மிக்ஜாம் புயலின் காரணமாக தற்போது பெய்து வரும் கனமழையினால் பாதிக்கப்படும் பொதுமக்கள் மற்றும் பாதிப்புகளை உடனடியாக அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியதின் பேரில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், ஊராட்சி பிரதிநிதிகள் ஆகியோர் தற்போது பாதுகாப்பு பணியிலும் மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அனுமந்தை அரசு பள்ளியில் பாதுகாப்பாக வைத்துள்ள குடும்பங்களை பார்வையிட்டு அவர்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்டு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி இருப்பதாகவும், மருத்துவர்கள் இங்கேயே முகாமிட்டு அவர்களை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, மேலும் நம் மக்கள் இனிமையான வீட்டுமனை இல்லை எனவும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர் இந்த கோரிக்கைகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக தீர்வு காணப்படும், மேலும் வண்டிபாளையம் அருகே மூழ்கிய தரைப்பாளத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் கடந்த ஆண்டு மழையின் போது அதற்கு மதிப்பீடு செய்யப்பட்டது, அதன் மதிப்பீடு இந்த ஆண்டு உயர்த்தப்பட்டுள்ளதால் விரைவாக நடவடிக்கை மதிப்பீடுகள் முடிக்கப்பட்டு அங்கு உயர்மட்டபாலம் அமைக்கும் பணி தொடங்கப்படும் என தெரிவித்தார்.