கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் பகுதியில் உள்ள மருங்கூர் கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்த செந்தில்நாதன் இவரது 4 வயது மகன் அஸ்வின் நேற்று மதியம் 3 மணி முதல் காணவில்லை. காணாமல் போன சிறுவனை அவரது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் கிடைக்காததால் முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதனை தொடர்ந்து முத்தாண்டிக்குப்பம் காவல் நிலைய காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பின்னர் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ரஞ்சிதா என்பவர் இந்த சிறுவனை அழைத்துச் சென்றதாக தெரிய வந்தது, இதனைத் தொடர்ந்து ஏராளமான காவல் துறையினர் மற்றும் ஊர் மக்கள் கிராமத்தை முழுவதும் தேடினர் சிறுவன் எங்கும் கிடைக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நள்ளிரவில் சென்னை கும்பகோணம் சாலையில் கொள்ளுகரங்குட்டை பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் 4 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் அதிக அளவில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பண்ருட்டி தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு உள்ளனர், மேலும் தொடர்ந்து சிறுவனின் கொலை குறித்து சிறுவனை கூட்டி சென்றதாக கூறப்பட்ட ரஞ்சிதா எனும் பெண்ணிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Watch Video : திருப்பூர் அருகே 7 பேரை தாக்கிய சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது