கடலூர் அருகே தனியார் பள்ளி பேருந்து மோதி மூன்று வயது குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தப்பி ஓடிய ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.


கடலூர் மாவட்டம் மேற்கு ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சீனிவாசன் - தீபா. இவர்களுக்கு மூன்று வயதில் தேஜேஸ்வரன் என்ற ஆண் குழந்தையும், பிறந்து சில மாதங்கள் ஆன பெண் குழந்தையும் உள்ளது.

 

இந்நிலையில் கிழக்கு ராமாபுரத்தில் உள்ள பாட்டி வீட்டில் தேஜேஸ்வரன் விளையாடிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. விளையாடுகின்ற குழந்தை எதிர்பாராத விதமாக சாலைக்கு சென்ற நிலையில் அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி பேருந்து மோதியது.

 

இதில் தேஜேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. மூன்று வயது குழந்தை மீது தனியார் பள்ளி பேருந்து மோதியயுடன் அதை ஓட்டி வந்த ஓட்டுநர் தப்பி ஓடினார்.



 

சிறுவன் தேஜேஸ்வரனின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. குழந்தையின் உடலை பார்த்து பெற்றோரும், கிராம மக்களும் கதறி அழுதனர். இந்த சம்பவம் மருத்துவமனையில் சோகத்தை ஏற்படுத்தியது.

 

பள்ளி பேருந்து ஓட்டி வந்த ஓட்டுநர் தலைமறைவான நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.