புதுச்சேரியில் மகளிருக்கென தனியாக அமைக்கப்பட்டுள்ள பிங்க் பெட்ரோல் பங்க்கை‌ போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா பெட்ரோல் போட்டு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 100 பெண்களுக்கு இலவசமாக பெட்ரோல் போடப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஒரே வரிசையில் நின்று பெட்ரோல் போடப்பட்டு வருகிறது. இதனால் வேலைக்கு செல்லும் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல் போடுவதில் பல சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனை மாற்றும் வகையில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட் நிறுவனம் சார்பில் புதுச்சேரி லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) சாலையில் உள்ள  பெட்ரோல் பங்கில் மகளிருக்கு என்று தனியாக பிங்க் பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டுள்ளது.






இதன் திறப்பு விழா விழாவிற்கு சிறப்பு விருந்தினராக புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்து கொண்டு பெண்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட பெட்ரோல் பங்க்கை துவக்கி வைத்து, பெட்ரோல் போட வந்த மகளிருக்கு ரோஜாப்பூ கொடுத்தும், பெட்ரோல் போட்டும் துவக்கி வைத்தார். மேலும் துவக்க நாள் பரிசாக நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர்களுக்கு 100 ரூபாய்க்கு பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியில் அமைச்சர் சந்திர பிரியங்கா கூறியதாவது:- புதுச்சேரி போக்குவரத்து கழகத்தில் உள்ள 100 பேருந்துகள் பழுதாகி உள்ளது. அதனை மாற்றி புதிய பேருந்து வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் மகளிருக்கான பிங்க் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவித்தார்.


என்ன செய்ய வேண்டும்? 


நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.