தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது, இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங்கள், மற்றும் இதர நீர் நிலைகள் அனைத்தும் தொடர்ந்து வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது குறிப்பாக சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடமையான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.



 

இந்நிலையில் மழையால் பாதிக்கபட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக இன்று டெல்டா பகுதிகளான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்படி முதற்கட்டமாக கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடலூர் பாண்டிச்சேரி எல்லையான ரெட்டிசாவடி பகுதியில் திமுகவினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

பின்னர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடி அடுத்த அரங்கமங்களம் ஊராட்சிக்கு உட்பபட்ட ராஜாகுப்பம் எனும் பகுதியில் மழையால் பாதிக்கபட்ட பகுதிகளை பார்வையிட்டு மேலும் மழையால் பாதிக்கபட்ட இடங்கள் குறித்தும் அந்த பகுதிகளில் ஏற்பாடு செய்யபட்டு உள்ள நடவடிக்கைகள் குறித்தும் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியத்திடம் கேட்டு அறிந்தார் பின்னர் ராஜாகுப்பம் பகுதி மக்களுக்கு உள்ள 18 குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, 5 கிலோ மளிகை பொருட்கள், வேட்டி சேலை, பாய், போர்வை போன்ற நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் 18 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் மேலும் பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பின்னர் சாலையில் நின்று கொண்டு இருந்த மக்களிடம் மனுக்களை பெற்று கொண்டார்.



 

அதனை தொடர்ந்து அடூர் அகரம் கிராம பகுதிகளில் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 550 ஹெக்டர் விவசாய நிலம் நீரில் மூழ்கி உள்ளது. இதில் நெற்பயிர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளதால் பாதிக்கபட்ட பகுதிகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மழையின் காரணமாக இடிந்து விழுந்த 5 வீட்டின் உரிமையாளர்களுக்கு மற்றும் மேலும் மழையால் ஏற்பட்ட கால்நடை உயிரிழப்புகளுக்கும் நிவாரணம் வழங்குகினார். பின்னர் தொடர்ந்து மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அதுத்த கட்டமாக மயிலாடுதுறை, நாகபட்டினம், திருவாரூர் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறார். கடலூர் மாவட்டத்தில் ஆய்வின் பொழுது நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கணேசன், கே.என்.நேரு ஆகியோர் உடன் இருந்தனர்.