கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி இரயில்வே ஆண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பவரும், கருவாடிக்குப்பம் பகுதியை சேர்ந்த சத்தியா என்பவரும்  கடந்த 2013 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் ஒன்றாக பணிபுரிந்து வந்தனர். பின்னர்  அவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்வதற்காக மணிமாறன் தனது பெற்றோரிடம் அனுமதி கேட்ட பொழுது மணிமாறன் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் ஆதலால் ஆதிதிராவிட சமூகத்தை சார்ந்த சத்யாவை  திருமணம் செய்ய அவரது தந்தை மற்றும் அவரது அண்ணன் ஆகியோர் மறுப்பு தெரிவித்து உள்ளனர். பின்னர் அவர்களது எதிர்ப்புகளை மீறி கடலூர் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் இருவரும் சிறிது காலம் சத்யாவின் வீட்டில் வசித்து வந்தனர்.


பின்னர்  மணிமாறன் தனக்கு சேரவேண்டிய சொந்த ஊரில் உள்ள தந்தையின் நிலத்தில் ஒரு பகுதியை கேட்டுப் பெற்றுக்கொண்டார் பின்னர் அங்கு சொந்தமாக வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர், இந்நிலையில் அவ்வப்போது மணிமாறன் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது தந்தை ஜெயகுமார் மற்றும் அவரது அண்ணன் கந்தவேல் ஆகியோர் மனைவி சத்யாவிடம் பிரச்சனை செய்து வந்துள்ளனர். பின்னர் தற்பொழுது கடந்த 24 ஆம் தேதி மணிமாறன் வீட்டில் இல்லாத நேரத்தில் சத்யா மற்றும் அவர்களது இரண்டு பெண் குழந்தைகள் தனியாக வீட்டில் இருந்த பொழுது அங்கு வந்த மணிமாறனின் தந்தை ஜெயக்குமார், அண்ணன் கந்தவேலு மற்றும் அவரது மனைவி ராஜசுந்தரி ஆகியோர் வீட்டிற்குள் நுழைந்து சத்யாவை சாதியின் பெயரால் தரக்குறைவாக பேசி அவர்கள் வைத்திருந்த வைத்திருந்த கட்டயால் அடித்துள்ளனர். மேலும் வீட்டில் உள்ள பொருட்களையும் அடித்து நொறுக்கி உள்ளனர்.




பின்னர் தொலைபேசி மூலம் கணவருக்கு சத்யா தகவல் தெரிவித்த உடன் மணிமாறன் வீட்டிற்கு வந்துள்ளார் பின்னர் அவரையும் அடித்து தரக்குறைவாக பேசியுள்ளனர், மேலும் மனிமாறனுக்கு பிரித்து கொடுத்துள்ள நிலத்தினை பதிவு செய்ய ஒத்துழைக்காமல் தற்பொழுது மணிமாறன் மற்றும் அவரது குடும்பத்தினரை வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் எனக்கூறி வெளியேறாவிட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த வீடியோ ஆதாரங்களுடன் மணிமாறன் மற்றும் அவரது மனைவி சத்யா ஆகியோர் இன்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர் அதில் தங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த  மணிமாறனின் தந்தை ஜெயகுமார், அண்ணன் கந்தவேல் மற்றும் அவரது மனைவி ராஜசுந்தரி மீது விசாரணை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.