இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஆ.ராசா பேசியதாக செய்தியாளர்களின் கேள்விக்கு வம்ப இழுத்து விலைக்கு வாங்க விட பாக்கீறீங்களா என மதுரை ஆதினம் செய்தியாளர்கள் மீது பாய்ச்சலாக கூறிவிட்டு செய்தியாளர் சந்திப்பினை புறக்கணித்து சென்றார்.


விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரில் உள்ள  கிருபாபுரீஸ்வரர் ஸ்ரீ மங்களாம்பிகை ஆலயத்தில் மதுரை ஆதின மடத்தின் 293வது ஆதினமாக விளங்க கூடிய ஸ்ரீ லஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய  சுவாமிகள் சாமி தரிசனம் செய்தார். அப்போது ஆதினத்தின் காலில் விழவந்த பக்தர்களை  தடுத்த அவர் அரசியல்வாதி காலில் விழுங்கள் என் காலில் விழவேண்டாம் என  கூறி சென்றார்.


 



அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தபோது மதுரை ஆதினத்திடம் செய்தியாளர்கள் சந்தித்த போது திமுக எம்பி ராஜா இந்துக்கள் குறித்து சர்சைக்குரிய வகையில் பேசியதாக கேள்வி எழுப்பியதற்கு அந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாது எனவும் வம்ப இழுத்து விலைக்கு வாங்க விட போறீங்களா என கூறி செய்தியாளர் சந்திப்பினை புறக்கணித்து சென்றார். அப்போது ஆதினத்தின் உடன் வந்த பாஜகவினர் செய்தியாளர்களிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் செய்தியாளர் சந்திப்பில் சலசலப்பு ஏற்பட்டது.