விழுப்புரம்: ராகுல் காந்தி எம் பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து விழுப்புரம் ரயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் ரயிலை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது போலீசாருக்கும் காங்கிரசாருக்கும் இடையே தள்ளு முள்ளு எற்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டனர்.


நாடாளுமன்ற தேர்தல் கடந்த 2019 ஆம் அண்டு குஜராத்தில் நடைபெற்ற போது பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக குஜராதிலுள்ள சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.






ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்தற்கு எதிராக இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, ரயில் மறியல், அரசு அலுவலகங்கள் முன்பாக உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்த திட்டமிட்டனர். அதன்படி இன்று விழுப்புரம் ரயில் நிலையத்தில் புவனேஸ்வரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லக்கூடிய ரயிலை காங்கிரஸ் கட்சியின் மத்திய மாவட்ட தலைவர் ஸ்ரீசீனிவாச குமார் தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் இன்று கைது செய்தனர்.  மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் மத்திய பாஜக மோடி அரசனை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண