புதுச்சேரியில் உள்ள திருநங்கைகளுக்கு அரசு சார்பில் இலவச மனைப்பட்டா வழங்கக்கோரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் திருநங்கைகள் சந்தித்து பேசினார்கள். திருநங்கைகளுக்கு என தனி நல வாரியம்  அமைத்தால் நன்றாக இருக்கும். எந்த பகுதிக்கு சென்றாலும் தங்களை இச்சையாகவே பார்க்கிறார்கள். பிச்சை எடுக்கத்தான் நாங்கள் வருவதாக நினைக்கிறார்கள். அதனால் எங்களுக்கென தனி குடியிருப்பு பகுதியை ஒதுக்கி தர வேண்டும் என வலியுறுத்தினார்கள்.


அவர்களிடம் அனைவருக்கும் ரேஷன்கார்டு உள்ளதா? என முதல்வர் ரங்கசாமி கேட்டார். தொடர்ந்து நிலஅளவை மற்றும் பத்திரப்பதிவேடுகள் துறை இயக்குனர் ரமேஷிடம், 3-ம் பாலினத்தவர்களுக்கு மனைப்பட்டா வழங்க முடியுமா? என்று கேட்டார். அரசு புறம்போக்கு நிலத்தில் மனைப்பட்டா வழங்க ஏற்பாடு செய்யலாம் என்று அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து வில்லியனூர் பகுதியில் மனைப்பட்டா கொடுக்க விரைவாக  நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ரங்கசாமி கேட்டுக்கொண்டார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண