விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சிறந்த சமூக சேவை ஆற்றியவர்களுக்கு நினைவு பரிசை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.
இரண்டு நாள் பயணமாக மூன்று மாவட்ட கள ஆய்விற்கு விழுப்புரம் வருகை தந்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று இரண்டாவது நாளாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் 3 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் கள ஆய்வு தொடங்கியது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகள் உடன் வளர்ச்சி திட்டங்கள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகின்றன. இதில் முக்கிய துறைகளின் அமைச்சர்கள்,பொன்முடி கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின்,மஸ்தான் கணேசன் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு முக்கிய துறைகளின் அரசு செயலாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
விழுப்புரம்,கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சிறந்த சமூக சேவை ஆற்றியவர்களுக்கு நினைவு பரிசை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார். அப்போது தலைமை செயாளர் இறையன்பு , அமைச்சர் பொன்முடி, மஸ்தான் ஆகியோர் இருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்