விழுப்புரம் : விழுப்புரம் அருகே இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கிலிருந்து பணமெடுத்து ஆன்லைன் ரம்மியில் 20 லட்சம்  இழந்ததால் வங்கி பணம்  43 லட்சத்துடன் தலைமறைவாகிய காசாளரை தாலுகா போலீசார் கைது செய்தனர்


விழுப்புரம் அருகேயுள்ள சிந்தாமணி இந்தியன் வங்கி கிளையில் வளவனூர் அருகேயுள்ள இளங்காட்டினை சேர்ந்த முகேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் 25 ஆம் தேதி  வங்கி பணிக்கு வந்தவர் திடீரென உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு வங்கி அருகேயுள்ள விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்வதாக சென்றுள்ளார். வங்கியிலிருந்து வெளியே செல்லும் போது வங்கியிலிருந்த  43 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணத்தை எடுத்து சென்றது தெரியவரவே வங்கி அதிகாரிகள் காசாளருக்கு பல முறை தொடர்பு கொண்டபோதும் தொடர்பினை எடுக்காமல் சில மணி நேரத்திற்கு பிறகு செல்போனை சுவிட் ஆப் செய்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த வங்கி மேலாளர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்தபோது தன்னை சிலர்  பணம் எடுத்து வர சொல்லி கடத்திவிட்டதாக கூறி உறவினர்களுக்கு ஆடியோவை காசாளர் அனுப்பி வைத்துள்ளார்.  பணம் மோசடி தொடர்பாக போலீசார் விசாரனை செய்ததில் காசாளார் முகேஷ் ஆன்லைன் ரம்மியில் ரூ. 20 லட்சம் பணம் இழந்ததால் வாடிக்கையாளர்கள்  வங்கி கணக்கிலிருந்து  பணத்தை  எடுத்து ரம்மி விளையாடியதும் வங்கி பணத்தை எடுத்து கொண்டு தப்பித்து ஓடிவிடலாம் என தன்னை கடத்தி விட்டதாக ஆடியோ அனுப்பி வைத்து பணத்துடன் தப்பித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பெங்களுருவில் தலைமறைவாக இருந்த முகேஷை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.43 லட்சத்து 86 ஆறாயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண