காரைக்கால் கார்னிவல் திருவிழா சாலை கலை நிகழ்ச்சிகளுடன் (ரோடு ஷோ) ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. புதுவை சுற்றுலாத்துறை, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் இணைந்து காரைக்கால் கார்னிவல் திருவிழாவை ஜனவரி 15 முதல் 18 ஆம் தேதி வரை என்கிற திட்டத்தில் காரைக்கால் விளையாட்டு அரங்க மைதானத்தில் தொடங்கியது. முன்னதாக கோயில்பத்து தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்திலிருந்து விளையாட்டு அரங்கம் வரையிலான ரோடு ஷோ நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. புதுவை போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.


சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிம், மாவட்ட ஆட்சியர் எல்.முகமது மன்சூர், துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்வின்போது குதிரை பூட்டிய வண்டியில் அமைச்சரும் சட்டப்பேரவை உறுப்பினரும் பயணித்தனர். மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவியர் பல்வேறு வேஷமிட்டவாறும் அனைத்து அரசுத் துறைகள் சார்பில் துறை சார்பிலான மக்கள் நலத் திட்டங்களை விளக்கியவாறு அலங்கார ஊர்தியுடனும் நாடக கலைஞர்கள், நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுவினர் அவரவர் செயல்பாடுகளை விளக்கியவாறு பாரதியார் சாலை, தோமாஸ் அருள் சாலை வழியாக விளையாட்டு அரங்கம் சென்றடைந்தனர்.


மாலை 7 மணி முதல் விளையாட்டு அரங்கத்தில் கார்னிவல் திருவிழா பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மைதானத்தில் மலர், காய், கனி கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உணவுத் திருவிழா, கைவினைப் பொருள்கள் கண்காட்சி உள்ளிட்ட அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஏராளமான மக்கள் கார்னிவல் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். 4 நாள்களும் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விளையாட்டுப் போட்டி, ரேக்ளா, படகு, சைக்கிள் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படவுள்ளன. நிறைவு நாளான 18ஆம் தேதி போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.