தமிழரின் பாரம்பரிய இசையான பறையை அடித்து நடனமாடி பொங்கல் நிகழ்ச்சிகளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பறை இசைக்கு நடனமாடியது அங்கிருந்தவர்களை ஆரவாரப்படுத்தியது. விழுப்புரம் நகர திமுக சார்பில் தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு உயிர்களைத் துறை அமைச்சர் பொன்முடி இல்லம் அருகே சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த சமத்துவ பொங்கல் நிகழ்ச்சிகளை முன்னிட்டு கோல போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. கோலப் போட்டியில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினார். அப்போது நிகழ்ச்சியின் துவக்கமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பறை இசை வாசிக்கப்பட்ட போது உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், திமுக விழுப்புரம் நகர செயலாளர் சர்க்கரை ஆகியோர் பறை இசைக்கு குத்தாட்டம் போட்டனர், இந்த நிகழ்ச்சி அங்குள்ள பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.