ஆயுத பூஜையும் விஜய தசமியும் ( Ayudha Pooja 2023 Tamil Nadu ) 


கல்விக்கு அதிபதியாக இருப்பவர் சரஸ்வதி என்று நம்பப்படுகிறது. விஜய தசமி நாளில் சரஸ்வதியை வழிபட்டு முதன்முதலில் படிப்பை தொடங்கும் ‘வித்யாரம்பம்’ நிகழ்வுகள் நடைபெறும். முந்தைய நாள் ஆயுத பூஜை. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற சொல்லாடல் இருக்கிறது இல்லையா. ஆம். தொன்மையான விசயங்களில் ஒன்று தொழில் செய்வதற்கு, உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கும் ஆயுதங்களை பூஜித்து வழிபடுவது. இது பழங்காலத்தில் இருந்தே வழக்கமாக உள்ளது.  இந்தியா முழுவதும் நவராத்திரியின் ஒன்பது நாட்களில், துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்கள் வழிபடுவதைச் முதன்மைப்படுத்துகிறது. தசரா அன்று ராவணனை ராமர் வென்றதைக் கொண்டாடுவதன் மூலம் முடிவடைகிறது. மறுபுறம், துர்கா தேவி அரக்கன் மகிஷாசுரனை வென்றதை, துர்கா பூஜையாக  கொண்டாடப்படுகிறது. துர்கா தேவியின் முதல் அவதாரமான ஷைல்புத்ரியை வழிபடுவதன் மூலம், நவராத்திரி தொடங்குகிறது, அதே சமயம் துர்கா மற்றும் மகிஷாசுரனுக்கு இடையே போர் தொடங்கிய நாளான ,மகாளயபட்சம் அன்று துர்கா பூஜை தொடங்குகிறது.


தசரா அன்று ராவணன் உருவ பொம்மைகளை எரிப்பதன் மூலம் நவராத்திரி கொண்டாட்டம் முடிவடையும். துர்கா பூஜை சிந்தூர் விளையாட்டுடன் முடிவடைகிறது. அங்கு திருமணமான பெண்கள் சிலைகளை மூழ்கடிப்பதற்கு முன்பு, ஒருவருக்கொருவர் சிந்தூர் என்று சொல்லப்படும், குங்குமத்தைக் கொண்டு விளையாடுகிறார்கள். நவராத்திரி கொண்டாட்டத்தின் போது, ​​துர்கா தேவியின் பக்தர்கள் ஒன்பது நாட்களுக்கு இறைச்சி, முட்டை, வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற உணவுகளை சாப்பிடாமல் பக்தியுடன் விரதம் இருக்கிறார்கள்


 இரு மடங்காக  உயர்ந்த பூக்களின் விலை


இந்துக்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆயுத பூஜை Ayudha Pooja நாளை திங்கட்கிழமை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆயுத பூஜை கொண்டாட தேவையான பூஜை பொருட்களை வாங்க கடை வீதிகள், மார்க்கெட் வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதேபோல் பூக்களை வாங்குவதற்கும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சாதாரணமாக பண்டிகை காலங்களில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்படும். அதேபோல் ஆயுத பூஜைக்கு இன்று ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில் விழுப்புரம் பூமார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு இருந்த விலையை விட ஒவ்வொரு பூக்களின் விலையும் இருமடங்காக உயர்ந்து காணப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியில் உள்ள மலர் சந்தையில்  வியாபரிகள், திண்டிவனம், பாண்டிச்சேரி, சென்னை போன்ற பல பகுதியிலிருந்து பூக்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.




விலைப்பட்டியல் என்ன ?


விழுப்புரம் மலர் சந்தையில் கடந்த வாரம்  600க்கு விற்கப்பட்ட குண்டு மல்லிகைப்பூ கிலோ 860 ரூபாய்க்கும், 240 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரளிப்பூ கிலோ 500 ரூபாய்க்கும்,  600 ரூபாய்க்கு விற்கப்பட்ட  ஜாதிமல்லி கிலோ 800 க்கும், 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேந்தி பூக்கள் கிலோ 90,100 ரூபாய்க்கும், 240 ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பங்கி பூ கிலோ 280 ரூபாய்க்கும் , 360 விற்கப்பட்ட முல்லை கிலோ 700 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட மூக்குத்தி ரோஸ் கிலோ 500 ரூபாய்க்கும், 600 ரூபாய்க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் கிலோ 1200 ரூபாய்க்கும், பன்னீர் ரோஜா கிலோ 350 ரூபாய்க்கும், கல் ரோஜா கிலோ 340க்கும், காக்கட்டான் பூ கிலோ 450 ரூபாய்க்கும், 90 ரூபாய்க்கு கோழிக்கொண்டை பூவும் விற்பனையாகிறது.


பொதுமக்கள் ஆர்வம்




பல்வேறு ஊர்களில் இருந்து பலரகப்பட்ட பூக்கள் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் பின்புறத்தில் அமைந்துள்ள பூந்தோட்டம் பகுதியில் உள்ள மலர் சந்தையில் விற்கப்படுவதால், பொதுமக்கள் அதிக அளவில் பூக்களை வாங்கி செல்கின்றனர். பூக்கள் விற்பனை குறித்து வியாபாரிகள் கூறுகையில்.... ஆயுத பூஜை, நவராத்திரி விழா, விஜயதசமி பண்டிகையில் பூக்களின் தேவை இருப்பதால் விலை அதிகரித்து இருந்தாலும் பூக்களை பொதுமக்கள் வாங்கி செல்கிறார்கள் என தெரிவித்த வியாபரிகள் விற்பனையும் இந்தாண்டு  சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் ஆயுதபூஜை மற்றும் விஜய தசமி வருவதால் பூக்களின் விலை சற்று உயர்ந்து தான் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.


சிறப்பு பூஜைக்கு நல்ல நேரம் 



23-ம் தேதி (நாளை) திங்கள்கிழமை ஆயுத பூஜையும் Ayudha Pooja , அதற்கு  மறுநாள் (24.10.2023) விஜய தசமியும் கொண்டாடப்படுகிறது. 23-ம் தேதி அன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலும் மதியம் 12க்கு மேல் 1.30 க்குள் பூஜை செய்ய நல்ல நேரம் என ஜோதிட நிபுணர்கள் சொல்கின்றனர். மாலையில் 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பூஜை செய்யலாம். அதனை தொடர்ந்து இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை பூஜை செய்து இறைவனை வணங்க நல்ல நேரம் ஆகும்.ஆயுத பூஜையன்று சரஸ்வதி தேவிக்கும், பார்வதி தேவிக்கும், லக்‌ஷ்மி தேவிக்கும் தான் முக்கியத்து